வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் அறிவித்திருக்கின்றார்.
அரசு விரைவு போக்குவரத்து மேலாண் இயக்குனர் ஆர் மோகன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: “வருகிற 5-ம் தேதி வெள்ளிக்கிழமை அமாவாசை, ஆறாம் தேதி சனிக்கிழமை, ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் வார விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து பல பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை 415 பேருந்துகளும், 6-ம் தேதி சனிக்கிழமை 310 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிறு கிழமை சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்கு ஏற்றபடி அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 7350 பயணிகளும், சனிக்கிழமை 3,264 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 7290 பயணிகளும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளின் கூட்ட நெரிசர்களை தவிர்ப்பதற்காக அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற செல்போன் செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…