இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றியை பெற்று இருக்கின்றது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டி தம்புலாவில் துவங்கிய நிலையில், டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கியை இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் 51 (40), கேப்டன் அசலங்கா 59 (35) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர்களை அடித்தார்கள்.
அதையடுத்து களம் இறங்கிய பதும் நிஷங்கா 11 (10), குஷல் மெண்டிஸ் 19 (16), குஷல் பெரேரா 6 (3), ராஜபக்சா 17 (11) ஆகியோர் சொற்பனங்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 179 க்கு 7 ரன்களை எடுத்து இருந்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி பிரண்டன் கிங் 63 (33), லிவிஸ் 50 (28) ரன்களையும் எடுத்து மிகச்சிறந்த துவக்கத்தை கொடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய ஷாய் ஹோப் 7 (6), ராஸ்டன் சேஸ் 19 (16), கேப்டன் ரௌமேன் பௌல் 13 (18) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஷாக் கொடுத்தார்கள். இறுதியில் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 17வது ஓவரை வீசிய தீக்ஷனா வெறும் இரண்டு நன்களை மட்டும் தான் விட்டுக் கொடுத்தார்.
தொடர்ந்து, பதிரனா வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து. கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள் இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் 19 ஓவரில் அஷிதா பெர்னான்டோ 9 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…