கிரிக்கெட் வெஸ்ட் இன்டீஸ் ஆணையம் அந்நாட்டு வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை அணிக்கு திரும்புமாறு ரிகால் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்தியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிம்றன் ஹெட்மயரை விளையாட வைக்க வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வெல்ட் இன்டீஸ் அணியில் இடம்பெறாத ஹெட்மயர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் வெறும் 13 இன்னிங்ஸ் விளையாடி அதிரடியாக 299 ரன்களை குவித்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹெட்மயர் வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2021 ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மயர் வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக விளையாடினார். ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில், கென்சிங்டன் ஓவலில் நடைபெற்ற நான்கு நாட்கள் பயிற்சிக்கு பிறகு, 15 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஷிம்ரன் ஹெட்மயர் மட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ், ஜேடன் சியல்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யானிக் கரியா உள்ளிட்டோரும் வெஸ்ட் இன்டீஸ் அணியில் ரிகால் செய்யப்படுகின்றனர். இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் இரண்டு போட்டிகள் ஓவலில் நடைபெற இருக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டினிடாட்-இல் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிகள் ஜூலை 27, ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் தாமஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்ப்பதாக வெஸ்ட் இன்டீஸ் அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் டெஸ்மன்ட் ஹேனஸ் தெரிவித்து இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இன்டீஸ் அணி தகுதி பெறவில்லை.
வெஸ்ட் இன்டீஸ் அணி வீரர்கள் விவரம் :
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பொவெல் (துணை கேப்டன்), அலிக் அதான்ஸ், யானிக் கரியா, கீசே கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிரான்டன் கிங், கைல் மையர்ஸ், குடகேஷ் மோடி, ஜேடன் சியல்ஸ், ரோமரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்லைர் மற்றும் ஒஷேன் தாமஸ்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…