latest news
அடுக்கிட்டே போறாங்களே.. வாட்ஸ்அப்-இல் டெஸ்டிங் ஆகும் புதிய அம்சம் – வேற லெவல் Fun இருக்கு..!
வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங் செய்யப்பட்டு வரும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒரே சமயத்தில் 32 பேருடன் வீடியோ காலில் பேச முடியும். புதிய அம்சம் பற்றிய தகவல்களை Wabetainfo வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த அம்சம் எப்படி இயங்குகிறது என்ற ஸ்கிரீன்ஷாட்களும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய நினைக்கும் அனைத்து அம்சங்களும் முதலில் அதன் பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டு அதன் பிறகு தான் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் செயலியில் வழங்கப்படும் அம்சங்களில் கோளாறு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
பீட்டா டெஸ்டிங் :
ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் 32 பேருடன் ஆடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய வாட்ஸ்அப் பீட்டா 2.23.24.1.0 வெர்ஷனில் 32 பேருடன் வீடியோ காலில் பேசக்கூடிய வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சத்தை டெஸ்டிங் செய்வதற்கான தகவல் அனுப்பப்படுகிறது. அதில் க்ரூப் காலிங் வசதியை டெஸ்ட் செய்யக் கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.
இந்த அம்சம் நேரடியாக வின்டோஸ் செயலியில் இருந்தபடி கான்டாக்ட்கள் மற்றும் க்ரூப்களில் இருப்பவர்களுக்கு வீடியோ கால் செய்யும் வசதியை வழங்குகிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ கால் செய்ய முடியும். இதுதவிர வாட்ஸ்அப்-இன் மற்றொரு அப்டேட்டில் சிலருக்கு மட்டும் 16 பேருடன் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
ஸ்கிரீன் ஷேரிங் :
இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது ஸ்கிரீனை வீடியோ காலில் இருப்பவர்களுக்கு ஷேர் செய்ய முடியும். இது பற்றிய தகவல் முந்தைய வாட்ஸ்அப் வின்டோஸ் பீட்டா 2.23.22.1.0 வெர்ஷனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. செயலியின் புதிய வெர்ஷனை இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் பயனர்கள் வீடியோ மெசேஜ் அனுப்புவதற்கான வசதியையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் மெசேஜ் :
கால்ஸ் தவிர பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் இதர அம்சங்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இப்படியான அம்சங்களில் ஒன்று தான் பின் மெசேஜ். இந்த அம்சம் ‘பின் சாட்’ போன்றே செயல்படும். ஆனால் இதில் பயனர்கள் மெசேஜ்களை தனிநபர்களுடனான சாட் அல்லது க்ரூப் சாட்-இல் பின் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.13.11 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. எதிர்கால ஸ்டேபில் அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.