latest news
என்ன இவங்களாம் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கூடாதா?
நீரின்றி அமையாது உலகு. நீர் என்பது மனிதனுக்கும் அனைத்து உயிர்களுக்கும் மிகவும் இன்றியமாயாதது. அப்படிப்பட்ட நீரை நாம் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும். பண்டைய காலத்தில் நீரை காப்பர் பாத்திரத்தில் சேகரித்து வைத்துள்ளனர். பின்னாளில் இதனை பிளாஸ்டிக் கேன்கள், பாலிதீன் பைகளில் சேர்த்து பருகுகின்றோம். இதனால் நமது கண்ணுக்கு தெரியாமல் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
எனினும் தற்போதைய காலகட்டத்தில் நீரினை சில்வர் பாட்டில்கள், சில்வர் குடங்களில் சேமித்து வைக்கின்றோம். இப்போது பெரும்பாலானோர் நீரை காப்பர் பாத்திரங்களில் சேமித்து வைக்கின்றனர். இதனால் நமது உடம்பிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அறிவுரையின்படி சாதாரண மனிதன் ஒரு வேளைக்கு 3 முதல் 4 டம்ளர் காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை பருகினால் அவர்கள் மிக சிறந்த பயனை அடையலாம் என கூறுகின்றனர்.
மேலும் இந்த தண்ணீர் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் எனவும் நமது உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்கும் எனவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தைராய்டு பிரச்சினைகள் உள்ளோர் இந்த தண்ணீரை பருகுவதால் தைராய்டு சுரப்பிகள் சீராக இயங்கும். மேலும் நமது தோலினை மென்மையாக வைக்கவும், பித்தம் வாதம் கபம் எனப்படும் 3 வகையான தொல்லைகளிலிருந்து விடுபடவும் காப்பர் தண்ணீர் பயன்படுகிறது.
இப்படிப்பட்ட பல நற்குணங்களை கொண்ட இந்த தண்ணீரினால் பல நன்மைகள் இருந்தாலும் மலசிக்கல், உடல் அரிப்பு, இரத்த போக்கு கோளாறு நோய் உள்ளவர்கள் இத்தண்ணீரை குடிக்க வேண்டாம் எனவும் ஆயுர்வேத மருத்துவ துறையினர் கூறுகின்றனர். எனினும் அவரவர் குடும்ப மருத்துவரின் அறிவுரையை கேட்பது நல்லது