Connect with us

Cricket

இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்? போட்டியில் இருக்கும் மகாராஷ்ட்ரா vs தமிழ்நாடு…

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் முதன்மை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு பதில் இந்தியாவின் கோச்சாக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அணியில் பல மாற்றங்கள் உருவாக இருக்கிறது.

அந்த வகையில், இந்திய அணியின் பவுலிங் கோச்சாக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பிசிசிஐ தரப்பிலிருந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்கலாம் என பேச்சுகள் அடிபட்டு வருவதாக தெரிகிறது.

இருந்தும், இந்திய அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டிருக்கும் கௌதம் காம்பீர் முன்னாள் பந்துவீச்சாளர் வினய்குமாரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பிசிசிஐ வினய் குமாரை நியமிக்க இதுவரை விருப்பம் காட்டவதாக தகவல் இல்லை.

ஜாகீர் கான் இந்திய அணியின் பிரபல இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். 92 டெஸ்ட் போட்டிகளில் 312 விக்கெட்களையும், தன்னுடைய கேரியரில் மொத்தமாக 610 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். பாலாஜி 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்.

மேலும், பாலாஜி 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், 2018 ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பௌலிங் கோச்சாக இருந்திருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் பவுலிங் கோச் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version