தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மீதான விவாதத்தின் போது 10.5% இட ஒதுக்கீடு ரொம்ப நாட்களாக கிடப்பில் இருக்கிறது.
இதனால் சாதிவாரியான கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மக்கள் தொகை பிரச்சினைக்கு நல்ல தீர்வை கொண்டு வருவது மத்திய அரசு கையில் தான் இருக்கிறது. அவர்கள் தான் கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்.
இதற்காக இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தரும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, 10% இட ஒதுக்கீடு குறித்த தரவுகள் இல்லை.
இதனால் இதை நடைமுறைப்படுத்த முடியாததால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நிதியரசர் பாரதிதாசன் தலைமையில் 10.5% இட ஒதுக்கீடு தரவுகளை பெற்றுத்தர வேண்டி ஒரு குழுவையும் அமைத்திருக்கிறோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இருந்தும் இந்த பதில் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் விதம் பாமக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜிகே மணி பேசுகையில், மத்திய அரசை கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்துவது சரிதான். இருந்தும் அவர்கள் தலையிடையில்லாமல் மாநில அரசை இதை செய்ய முடியும். குஜராத், கேரளா மாநிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…