விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதுபோல, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களைப் பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு செய்தனர். திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” என்று கூறினார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…