இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு முதல் கணவரின் அனுமதி இல்லாமல் நீதிமன்றத்துக்கு சென்று மகனை தத்தெடுக்க வேண்டும் எனக் கேட்ட நீதிமன்றம் சென்றுள்ளார் பெண் ஒருவர்.
பொதுவாக பராமரிப்பு சட்டத்தின் கீழ் ஒரு குழந்தையை தத்தெடுக்க கண்டிப்பாக தந்தையின் அனுமதி வேண்டும். ஆனால் ஒரு பெண் அந்த அனுமதி இல்லாமல் என்னுடைய குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என நீதிமன்றம் படியேறி இருக்கிறார்.
வழக்கறிஞரான திவ்யா ஜோதி சிங் தன்னுடைய சக வழக்கறிஞரை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் 2015ம் ஆண்டு திவ்யா கர்ப்பிணியாக இருந்த போது அவர் கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து வெளியேறிவிட்டார். இதை தொடர்ந்து திவ்யாவிற்கு ஒரு மகன் பிறந்துள்ளார்.
குழந்தை பிறந்ததில் இருந்து திவ்யாவையும், பிள்ளையையும் வந்து முதல் கணவர் பார்க்கவே இல்லையாம். இதையடுத்து, 2016ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டு இருக்கிறார் திவ்யா. முதல் கணவரும் அந்த பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துக்கொண்டு இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு திவ்யா மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு முதல் கணவரிடம் இருந்து தொடர்ந்து பிரச்சினை வரத் தொடங்கியது. அதில் குழந்தை பிரச்சினை பிரதானமாக தன்னுடைய இரண்டாவது கணவருடன் இணைந்து குழந்தையை முறைப்படி தத்தெடுக்க உச்சநீதிமன்ற படியேறி இருக்கிறார்,
அதன்படி, குழந்தை பிறந்ததிலிருந்து அதை பார்க்க கூட வராத தந்தையின் அனுமதி இல்லாமல் முறைப்படி தன் குழந்தையை பராமரிப்பு சட்டத்தின்படி தத்தெடுத்துக் கொள்ள திவ்யா மனு தாக்கல் செய்திருக்கிறார்.இந்த மனு மீதான விசாரணையில் தந்தையின் அனுமதி இல்லாமல் எப்படி குழந்தையை தத்து கொடுக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மேலும் முதல் கணவருக்கு நோட்டீஸ் அனுப்பி இரண்டு வாரங்களில் அவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…