இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று
அசத்தியது. இதே போல இந்திய பெண்கள் அணியும் வாகை சூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரகத்தில் பெண்கள் ஒருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து
வருகிறது. இந்திய அணி க்ரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தகுதி சுற்றில் தனக்கான நான்கு போட்டிகளையும் விளையாடி முடித்து விட்டது இந்திய அணி. இரண்டு
போட்டிகளில் வெற்றி, இரண்டில் தோல்வி என இரண்டுக்கு – இரண்டு என்ற நிலையில் புள்ளிப் பட்டியலில்
இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது இந்திய அணி.
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில்,
வென்றால் தான் அரை இறுதியில் நுழைய வாய்ப்பு என்ற நிலையில் ஆஸ்திரேலியாவுடனான தனது தகுதி
சுற்றின் கடைசி ஆட்டத்தினை ஆடியது இந்தியா.
டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் நூற்றி ஐமபத்தி ஓரு ரன்களை எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கிரேஸ் ஹாரிஸ்
அதிகபட்சமாக நாற்பது ரன்களை எடுத்திருந்தார்.
பெர்ரி, மெக்ராத் ஆகியோர் முப்பத்தி இரண்டு ரன்களை
எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை
கைப்பற்றினர். ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வாஸ்ட்ராகார், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு
விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
நூற்றி ஐம்பத்தி இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம்
முதலே தடுமாறத் துவங்கியது. துவக்க வீரர்கள் ஷிபாலி வர்மா இருபது ரன்களும், மந்தனா ஆறு ரன் களை
மட்டும எடுத்து பெவிலியன் திரும்பினர். ஹர்மீத் ப்ரீத் கவுர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதமடிதார்.
ஐம்பத்தி நான் கு ரன்களை குவித்த நிலையில் அவரும் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். தீப்தி ஷர்மா
இருபத்தி ஒன்பது ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீச இந்தியா நூற்றி நாற்பத்தி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
நேற்றைய தோல்வியை அடுத்து இந்திய அணியின் அரை இறுதி கனவு மங்கிப்போனது. மூன்று போட்டிகளில்
விளையாடி இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணி, தனது கடைசி போட்டியில் வெற்றி
பெற்று விட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும்.
மாறாக அந்த தோல்வியைத் தழுவினால் ரன்-ரேட்
கணக்கீடு நடத்தப்படும். அதிலும் நியூஸிலாந்து அணி தனது கடைசி போட்டியில் தோல்வியைத் தழுவினாலும்
அந்த அணிக்கு அடுத்த சுற்றிற்கு செல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதனால் இந்திய அணி அடுத்த சுற்றிற்கு செல்ல வேண்டுமானால், நியூஸிலாந்து மிகக் கடுமையான தோல்வியை அடைய வேண்டும். இந்திய அணி
எப்படியாவது அரை இறுதிக்குள் நுழைய வேண்டும் என்பதுவே இந்திய ரசிகர்களின் வேண்டுதலாக
இருந்து வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…