Connect with us

Cricket

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

Published

on

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்யது. இதனால் முதலில் பேட்டிங் ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 17 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. விக்கெட் இழப்பின்றி 119 ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியின் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா அணி பேட் செய்த போது ஏற்பட்ட சம்பவத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை வந்த வேகத்தில் களத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவானது.

வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இரண்டாவது ஓவரில் பேட் செய்த வொல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார். குறிப்பிட்ட பந்தை வொல்வார்ட் நேரில் ஓங்கி அடிக்க, அதனை பிடிக்க ஜேம்ஸ் முற்பட்டார். எனினும், பந்து ஜேம்ஸ்-இன் கையில் பட்டு நேரடியாக அவரது தாடையில் வேகமாக உரசியது.

இதில் நிலை தடுமாறிய ஜேம்ஸ் சட்டென தனது முகத்தை திருப்பிக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனே களத்திற்குள் வந்த பிசியோ ஜேம்ஸ்-க்கு முதலுதவி வழங்கினார். சிறிது நேரம் சிகிச்சை வழங்கிய நிலையில், பிசியோ ஜேம்ஸ்-ஐ களத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டார். அந்தப் போட்டியில் தனது முதல் ஓவரை வீசத் தொடங்கிய ஜேம்ஸ் அதனை முடிக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறினார். நேற்றைய போட்டி முடியும் வரையில் ஜேம்ஸ் மீண்டும் களத்திற்குள் வரவேயில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சேசிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றி இலக்கை, 13 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எட்டியது. இதன் மூலம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

google news