மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரை போட்டி அம்பயர் மற்றும் மூன்றாம் நடுவருடன் வாக்குவாதம் செய்ய வைத்தது.
போட்டியில் நியூசிலாந்து அணி பேட் செய்த போது, சரியாக 14 ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீராங்கனை கெர், அதனை லாங்-ஆஃப்-க்கு அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார். அப்போது, இரண்டாவது ரன் ஓடும் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைக்கு பந்து முன்கூட்டியே கிடைக்க, அவர் அதனை ஸ்டம்பிங் செய்துவிட்டார்.
தான் அவுட் ஆனதை உணர்ந்த கெர், களத்தை விட்டு வெளியேற துவங்கினார். அதுவரை அமைதி காத்த அம்பயர், கெர் அவுட் ஆனதாக நினைத்து வெளியேறிக் கொண்டிருந்த போது, அவரை மீண்டும் உள்ளே அழைத்ததோடு, குறிப்பிட்ட பந்து ‘டெட் பால்’ என்று அறிவித்தார். விக்கெட் என உணர்ந்து வெளியேறிய வீராங்கனையை, அம்பயர் டெட் பால் விதியை கூறி மீண்டும் களத்திற்குள் அழைத்த சம்பவம் தான் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் தலைமை பயிற்சியாளரை வாக்குவாதம் செய்ய வைத்தது.
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. விதிகளின்படியே அம்பயர் முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஐ.சி.சி. விதி 20-இன் கீழ் வரும் கிளாஸ் 20.1-இல் “பந்துவீச்சு அம்பயரை பொருத்தவரை ஃபீல்டிங் பக்கமும், விக்கெட்டில் உள்ள இரு பேட்டர்களும் விளையாட்டை நிறுத்துவதை தெளிவாக தெரிந்தால், பந்து ‘டெட் பால்’-ஆக கருதப்படும்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனாலும், இந்த விவகாரத்தில் இரு அணி வீராங்கனைகளும் விளையாட்டை நிறுத்த முற்படவில்லை. மாறாக நியூசிலாந்து வீராங்கனை இரண்டாவது ரன் ஓட முற்படுகிறார், அப்போது இந்திய வீராங்கனை ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஐ.சி.சி. விதி 20.6-இன் கீழ் “ஒருமுறை டெட் பால் என்று அறிவிக்கப்பட்டால், அந்த முடிவை மாற்றவோ, மீண்டும் அந்த பந்தை வீசச் செய்யவோ முடியாது,” என கூறுகிறது. ஐசிசி விதியின் கீழ் டெட் பால் என அறிவிக்கப்பட்ட முடிவை மீண்டும் மாற்ற முடியாது என்ற விதியை அம்பயர்கள் பின்பற்றியிருப்பார்கள் என்றே தெரிகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…