டெல்லியில் வழி விடாமல் ஆட்டோ ஓட்டிச் சென்ற ஓட்டுநரை இளம் பெண் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாக இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும், சில வீடியோக்கள் பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக இருக்கும். சில வீடியோக்கள் மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து கூறும் விதத்தில் இருக்கும். மேலும் சில வீடியோக்கள் அடித்து சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோவாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சாலையில் வழி விடாமல் சென்ற நிலையில் அந்த ஓட்டுநரை இளம் பெண் இழுத்து போட்டு அடித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் முக்கிய சாலையில் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு சென்றிருந்த நிலையில் அந்த சாலையில் புல்லட்டில் சென்ற இளம் பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுனர் வழி விடாமலே சென்று இருக்கின்றார்.
இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளம் பெண் அந்த ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ ஓட்டுநரை வெளியில் இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் ஆட்டோ ஓட்டுனரின் மண்டை உடைந்து விட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த ஆட்டோவுடன் கூறியதாவது சாலையில் அதிக போக்குவரத்து நெரிசலில் இருந்தால் தன்னால் வழிவிட இயலவில்லை. அதற்கு அவர் என்னை இழுத்துப் போட்டு அடித்தார் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…