Connect with us

Cricket

வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட்.. வைரல் ஆகும் யுவராஜ் சிங் டுவிட்டர் பதிவு..!

Published

on

Yuvaraj-Sungh-Stuart-Broad-Featured-img

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தற்போதைய ஆஷஸ் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இவரது ஓய்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய ஆஷஸ் போட்டியின் நான்காவது நாளில், வீரர்கள் அணிவகுத்து நின்று ஸ்டூவர்ட் பிராட்-க்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுன்டர் யுவராஜ் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டூவர்ட் பிராட்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

Stuart-Broad-pic

Stuart-Broad-pic

“அபாரமான டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவரும், உண்மையான லெஜன்ட் ஸ்டுவர்ட் பிராட்-க்கு வாழ்த்துக்கள். உங்களது பயணம் மற்றும் அர்ப்பனிப்பு மிகவும் ஊக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த பெரும் இன்னிங்ஸ்-க்கு வாழ்த்துக்கள் பிராடி,” என்று தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது, ஸ்டூவர்ட் பிராட் தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை பெற்றார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராட்-இன் ஒரே ஓவரில் இந்திய ஆல்வரவுன்டர் யுவராஜ் சிங் ஆறு பந்துகளையும் சிக்சர்களுக்கு பறக்க விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அத்தகைய சாதனை புரிந்த முதல் இந்தியர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றார்.

Yuvaraj-Singh-Tweet

Yuvaraj-Singh-Tweet

இவ்வாறு செய்த பிறகும், ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அபார வளர்ச்சியை பெற்றார். ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் 850 விக்கெட்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். 17 வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டூவர்ட் பிராட் இதுவரை 602 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பிராட் 3 ஆயிரத்து 656 ரன்களை எடுத்து இருக்கிறார். இவரது சராசரி 18 ஆகும். இதில் 1 சதம், 13 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம், இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் ஸ்டூவர்ட் பிராட் இடம்பிடித்துள்ளார்.

google news