அமேசான் நிறுவனம் இதற்கு முன் பல வித ஸ்பீக்கர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதைப்போல தற்போது பாப் வடிவிலான ஸ்பீக்கர் மற்றும் ரவுண்டு அண்ட் பக் வடிவிலான எகோ ஸ்பீக்கரையும் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது அமேசான் நிறுவனம் எகோ பட்ஸ் உடன் எகோ ஸ்பிக்கர்ரையும் வழங்க உள்ளது. இந்த எகோ ஸ்பிக்கர் அரைவட்ட வடிவில் மிகவும் அழகாக நம்மை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த எகோ பட்ஸ் தவிர அமேசான் நிறுவனம் எகோ ஷோ 5 மற்றும் எகோ ஷோ கிட்ஸ் எனும் இரு பொருட்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த சாதனங்கள் அனைத்தும் மிகவும் கட்சிதமான அளவுடனும் மற்றும் அதிக மதிப்புடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் அலெக்சா மூலம் இதனுடன் தொடர்பு கொள்ளும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எகோ பாப்:
எசோபாப் தனக்கென்று தனித்தன்மை கொண்டுள்ளது. இதன் முன்பக்க ஸ்பீக்கர் மற்றும் அலெக்சாவை உபயோகிப்பது இதன் தனித்தன்மை. இவை அனைத்தும் ரூ. 3296க்கு அமேசானில் கிடைக்கிறது. இது மிகவும் சிறிய மற்றும் நாம் எங்கும் எடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது நம்து வீட்டில் வைத்து எளிமையாக உபயோகப்படுத்தும்படியும் அமைந்துள்ளது.
எகோ ஷோ 5 மற்றும் எகோ ஷோ கிட்ஸ்:
அமேசான் மேலும் தனது தயாரிப்பான எகோ ஷோ 5 மற்றும் எகோ ஷோ கிட்ஸ் எனும் இருவித பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆடியோ, வீடியோ என அனைத்தையும் நாம் இனிமையாக அனுபவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கென பிரேத்யகமாக தயாரிக்கப்பட்ட இந்த வகை சாதனங்கள் நமது பொழுதுபோக்கிற்கு மிகசிறந்த பங்களிப்பை அளிக்கின்றன. மேலும் இதன் மூலம் நாம் கேளிக்கைகள், நடனங்கள்,ஆடியோபுக் என அனைத்து சிறப்பம்சங்களையும் பயன்படுத்தலாம்.
எகோ பட்ஸ்:
இந்த பட்ஸின் மூலம் நாம் இசை, கால்கள் என அனைத்தையுமே இயக்க முடியும். இதன் ஹை குவாலிட்டி செளண்ட், பேட்டரி தன்மை, மிக குறைந்த விலை என மிக சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. இதில் நாம் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி வரை நாம் உபயோகிக்கலாம் மற்றும் 20 மணி நேரம் நாம் பாடல்களையும் கேட்க முடியும். மேலும் இது மிகசிறப்பு வாய்ந்த தன்மை இந்த சாதனத்தை நாம் ஒரெ நேரத்தில் இரு விதமான சாதனங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம். இது அதில் பிளே செய்யப்படும் ஆடியோவை பொருத்து இது தானாகவே கனெக்ட் ஆகுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…