latest news
உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாக வேண்டுமா…? நாலே நாளு நாள் மட்டும் இதைக் குடிங்க…!
தாவரத்தின் தரைக்கீழ்த்தண்டு வகையைச் சேர்ந்தது பீட்ரூட். நல்ல இனிப்பு சுவையைக் கொண்டது. ரத்த விருத்திக்கு ஏற்றது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது.
இரும்பு, சோடியம், மக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன. இவை தவிர வைட்டமின் சி, பீட்டெய்ன், போலேட் போன்ற சத்துகளும் உள்ளன.
அல்சரால் அவதிப்படுபவர்கள் வாரத்தில் 3 நாள்கள் பீட்ரூட் ஜூஸ் போட்டு அதில் சிறிது தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். விரைவில் அல்சர் குணமாகி விடும்.
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உடலின் உள்ளுறுப்புகள் சரியாக வேலை செய்ய வேண்டும். அதாவது சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்றவை தான் முக்கியமான உள்ளுறுப்புகள்.
இவற்றில் உள்ள நச்சுகளை நீக்குவது தான் நமது தலையாய பணி. அதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைக் கொண்டே எளிதில் நீக்கி விடலாம்.
பீட்ரூட் இந்த வேலையை செவ்வனே செய்கிறது. அதனால் நாம் பீட்ரூட் ஜூஸ் நாலே நாளு நாள்கள் மட்டும் சாப்பிட்டால் போதும். உள்ளுறுப்புகள் சுத்தமாகி விடும்.
காய்கறிகளில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் உள்பட பல விதமான சத்துக்கள் உள்ளன. 10 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால் 43 மில்லிகிராம் கலோரிகளும், 2 கிராம் கொழுப்பும் கிடைக்கும்.
உடல் எடை போடாது. அதனால் தாராளமாக அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமாகவே உள்ளது.