life style
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் நெல்லிக்காய்!.. அப்படி என்னதான் இருக்கு இதுல..
இயற்கை மனிதருக்கு பல அற்புத படைப்புகளை தந்துள்ளது. அதில் ஒன்றுதான் நெல்லிக்காய். இயற்கையில் இது ஒரு கனி என்றாலும் இதனை நாம் நெல்லிக்காய் என்றுதான் அழைகின்றோம். இந்தியன் கூஸ்பெரி என அழைக்கப்படும் இதற்கு பல பெயர்கள் உண்டு. பெரிய நெல்லி, முழு நெல்லி, மலை நெல்லி போன்ற ஏராளமான பெயர்கள் இதற்கு உண்டு.
இதில் விட்டமின்-சி சத்துகள் அதிகம் உள்ளன. இதை தவிர விட்டமின்-ஈ, மெக்னீசியம், அயர்ன், கால்சியம் என பல சத்துக்களும் இதில் உள்ளன. மேலும் இது நமது உடம்பில் ஏற்படும் பல விதமான நோய்களையும் சரிசெய்யும் ஆற்றல் படத்ததாக உள்ளது. இந்த காரணத்தினால் இதனை சித்தா, ஆயுர்வேதம் என பல துறைகளில் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
நெல்லிக்காய் சாப்பிடுவதின் மூலம் நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்யலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வர அவர்களின் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் இது ஒரு இரத்த சுத்திகரிப்பானாகவும் பயன்படுகிறது. உடலில் உள்ள சூட்டை குறைக்கவும் இது உபயோகமாகிறது.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க செய்ய இதனை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். இதில் நார்சத்துக்கள் நிறைய உள்ளதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் சரியாகும். இது ஈரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க செய்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளும் குறையும் மற்றும் எலும்பினை வலுவாக்கும்.
பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யலாம். மேலும் இதனை சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறும். இருவேறு சுவைகளை கொண்ட இக்கனியை நாம் தினமும் உண்பதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம். உலர் நெல்லி, தேன் நெல்லி என பல்வேறு வகைகளில் இதனை நாம் கடைகளில் பெறலாம்.