ஆப்பிள் நிறுவனம் என்றாலே அதன் போன், லேப்டாப் என அனைத்திற்கும் பெயர் பெற்றதாகும். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் 14 -ஐ வெளியிட்டது. இதன் விலை ஆரம்பத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. இதன் விலை ரூ. 80,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின் இதன் ஸ்டோரேஜ் வசதிக்கு ஏற்ப இதன் விலை ரூ. 100000 வரையிலும் கூட இருந்தது.
ஆனால் தற்போது இதன் விலை பிரபல வணிக நிறுவனமான ஃப்லிப்கார்ட்டீல் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐபோன் மீது மிகப்பெரிய அளவில் சலுகையை அறிவித்துள்ளது. ஃப்லிப்கார்ட்டீல் தற்போது மொபைல் பொனான்சா சேல் ஆரம்பித்துவிட்டது. இந்த ஆஃபரில் ஆப்பிள் ஐபோன்14 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மொபைலானது ரூ. 67,999 க்கு விற்கப்படுகிறது. மேலும் எச்டிஎஃப்சி பாங்க் கார்டினை உபயோகிப்பவர்களுக்கு மேலும் 4,000 சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே இதன் விலை ரூ. 63, 999 க்கு விற்கப்படுகிறது.
மற்றுமொரு சலுகையும் இந்த நிறுவனம்அறிவித்துள்ளது. அதன்படி நமது பழைய மொபைலானது நல்ல ஒரு நிலையில் இருந்தால் அதனை எக்ஸ்சேஞ்ச் செய்வதின் மூலம் நாம் கூடுதலாக ரூ. 33,000 வரை சலுகையை பெறலாம். ஆகமொத்தம் தற்போது 128 ஜிபி ஸ்டோரேஜ் வசது கொண்ட இந்த மொபைலானது தற்போது ரூ. 30,999க்கு விற்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 14ன் சிறப்பம்சங்கள்:
ஆப்பிள் ஐபோன் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் திரையினையும் மேலும் இதன் மீது செராமிக் ஸ்டீல் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்புற கேமரா 12MP பிரைமரி சென்சாரையும் மற்றும் 12MP அல்ட்ரா வைடு சென்சாரையும் கொண்டுள்ளது. மேலும் இதன் 12MP முன்புற கேமரா நமக்கு மிக சிறந்த செல்ஃபி மற்றும் வீடியோ கால்களை நமக்கு கொடுக்கின்றது.
இந்த மொபைலானது 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று ஸ்டோராஜ் வசதிகளுடன் கிடைகின்றது. மேலும் இந்த ஆப்பிள் ஐபோன்14 மிட்நைட், பர்ப்புல், ஸ்டார்லைட், ப்ராடக்ட் ரெட் மற்றும் நீலம் என பல்வேறு கலர்களில் கிடைக்கின்றது. மேலும் சமீபத்தில் இந்த நிறுவனம் மஞ்சள் நிற மொபைலையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படி சிறந்த சலுகையுள்ள மொபைல்களை நாம் உடனே வாங்குவதால் நமது பணமும் மிச்சப்படும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…