Connect with us

latest news

ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து விட்டீர்களா?..இந்த முறைகளை ஃபாலோவ் பண்ணுங்க..

Published

on

aadhaar voter id linkage

சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டினை இணைக்கும் படியான அறிவிப்பினை வெளியிட்டது. இவ்வாறு இணைப்பதால் ஒரு நபரே ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுக்க முடியும். எனவே தேர்தல் ஆணையமானது இந்த திட்டத்தை கட்டாய திட்டமாக்கியது. இவ்வாறு இணைப்பதற்கு நாம் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இதனை நாம் நமது மொபைல் போன் மூலமாகவே மிக எளிமையாக பண்ணலாம். இவ்வாறு ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் எவ்வாறு இணைப்பது என்று தெரியவில்லையா?.இதோ கீழே உள்ள படி நிலைகளை பின்பற்றவும்.

  1. ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் முதலில் ‘Voter Helpline App‘ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. செயலியினுள் நுழைந்தபின் ‘I Agree‘  என்ற பட்டனை அழுத்தி ‘Next‘ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  3. Voter Registration என்ற பட்டனை அழுத்தியபின் ‘Electoral Authentication Form‘ ஐ செலக்ட் செய்யவும்.
  4. ‘let’s Start‘ என்ற பட்டனை அழுத்தியபின் நமது ஆதார் கார்டுடன் இணைந்திருக்கும் மொபைல் எண்ணை கொடுக்கவும். பின் OTP யானது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்து சேரும்.
  5. OTP யை கொடுத்தபின் ‘Yes I have voter ID’ என்ற பட்டனை அழுத்தவும்.
  6. நமது வாக்களர் அட்டையின் (EPIC) எண்ணை கொடுத்தபின் நமது மாநிலத்தை தேர்வு செய்யவும். பின் ‘Fetch Details‘ என்ற பட்டனை அழுத்தவும்.
  7. Proceed’ என்ற பட்டனை அழுத்தியபின் நமது தகவல்களை சரி செய்து பின் ‘Next’ என்ற பட்டனை அழுத்தவும்.
  8. பின் அதனுள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து ‘Done’ என்ற பட்டனை அழுத்தவும்.
  9. பின் Form 6B யில் நமது தகவல்களை சரிபார்த்து ‘Confirm‘ என்ற பட்டனை அழுத்தவும்.

இவ்வாறான செயல்முறைகளின் மூலம் நாம் நமது ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். மேலும் http://www.nvsp.in என்ற முகவரிக்கு சென்று நமது ஆதார் கார்டு- வாக்காளர் அடையாள அட்டை இணைந்துவிட்டதா எனவும்  அறியலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *