latest news
கூகுள் பிக்சல் ரசிகரா நீங்கள்?.. உங்களுக்கான நற்செய்தி இதோ!..
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிது. அதிலும் சிலர் ஆப்பிள், கூகுள் போன்ற போன்களை வாங்க தனி ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் இதிலுள்ள சில வகை சிறப்பம்சங்கள்தான். அந்த வகையில் கூகுள் நிறுவனமானது வரும் மே11 ஆம் தேதி தனது படைபான பிக்ஸல்7a-வை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என பார்ப்போம்.
தொழில்நுட்பம்:
இந்த போனில் GSM/HSPA/5G என மூன்று வகை நெட்வொர்கையும் உபயோகபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் இது நனோ சிம்(nano sim), இ சிம்(esim) என இரண்டு வகையான சிம்கார்டுகளையும் உபயோகிக்கலாம்.
ஆண்ட்ராய்டு:
இதில் ஆண்ட்ராய்டு 13 OS மற்றும் சிபுயூ(CPU) octa-core எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே(DISPLAY):
இதில் 6.1 இன்ச் OLED திரையுடன் பார்ப்பவைகளுக்கு சிலீர்ப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் கொரில்லாகிளாஸ் சேர்ந்தே வருவதால் நமது ஃபோனுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மெமரி(MEMORY):
இதன் உள்ளீட்டு மெமரியாக 128ஜிபி 8ஜிபி RAM வசதியை கொண்டுள்ளது.
கேமரா வசதி:
இதன் பின்புறத்தில் 64எம்பி வைட் கேமராவையும் 13எம்பி அல்ட்ராவைட் கேமராவையும் டுயல் LED flash lightயையும் கொண்டுள்ளது. இதனால் நாம் எடுக்கிம் புகைப்படமானது துல்லியமாக இருக்கும்.
இதன் முன்புறம் 13எம்பி வைட் கேமராவையும் பனோரமா, ஆட்டோ எச்.டி.ஆர்(Auto HDR) வசதியையும் கொண்டுள்ளது.
பேட்டரி(Battery):
இதன் பேட்டரி 4385mAh வரை உள்ளதால் இதை நாம் அதிக நேரம் உபயோகப்படுத்தலாம்.
இது ஆர்க்டிக் நீலம், கார்பன், காட்டன் போன்ற மூன்று வண்ணங்களிம் நமக்கு கிடைக்கவிறுக்கிறது.
ஆனால் இந்த மொபைலை வாங்கும் போது சார்ஜர் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் விலை ரூ. 50000 க்கும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வசதிகளை விரும்புவோர் இந்த பிக்ஸல்7a வை கண்டிப்பாக வாங்கலாம்.