latest news
ஜிமெயில் பற்றிய முக்கியமான அறிவிப்பினை வெளியிட்ட கூகுள் நிறுவனம்.. அப்போ இன்னைக்கே யூஸ் பண்ணுங்க..
இந்த காலத்தில் தகவல்களை அனுப்புவதற்கென்றே பல்வேறு வசதிகள் உள்ளன. அப்படிப்பட்ட வரிசையில் ஜிமெயில் எனப்படும் ஒரு செயலியின் பங்கு அதிகம். இதனை பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு தேவையான தகவல்களையும் அறிவிப்பினையும் தெரியப்படுத்த உபயோகிக்கின்றனர். இதன் மூலம் நாம் நமது ரெக்கார்ட்ஸ், புகைப்படங்கள் போன்ற அனைத்தையுமே நமக்கு தேவையான நபர்களுக்கு அனுப்பலாம். மேலும் அலுவலகங்களில் தேவைப்படும் பொதுவான அறிவிப்புகள் போன்றவற்றையும் ஒரு செய்தியின் மூலம் நாம் அனைவருக்கும் அனுப்ப இயலும்.
தற்போது கூகுல் நிறுவனம் இது தொடர்பான முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்த ஒரு நபர் தனது ஜிமெயில் அக்கவுண்டை 2 ஆண்டுகளுக்கும் மேல் உபயோகிக்கவில்லையோ அவைகளின் அக்கவுண்ட் மற்றும் அதில் உள்ள அனைத்து தகவல்களும் முற்றிலுமாக நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் கூகுல் வொர்க்ஸ்பேஸில்(Google Workspace) உள்ள அனைத்து தகவல்களும் நீக்கப்படுவதாகவும் தெரிவுத்துள்ளது.
ஆனால் இந்த கொள்கையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமல்படுத்தபடமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே இன்னும் ஜிமெயிலை உபயோகிக்காத நபர்கள் இந்த ஆண்டிற்குள் தங்களது கணக்கினை புதுப்பித்து கொள்ளுமாறும் கேட்டு கொண்டுள்ளது.
மேலும் கூகுல் நிறுவனம் தங்களது அக்கெளண்டை உபயோகப்படுத்துபவர்கள் அதனை எந்த அளவு உபயோகிக்கிறார்கள் என்பதையும் கணக்கிட போவதாகவும் தெரிவித்துள்ளது. கூகுல் ஒன் என்ற செயலியை உபயோகிப்பதால் நாம் நமது ஜிமெயில் கணக்கினை தொடர்ந்து உபயோகப்படுத்துகின்றோம் என்றும் அர்த்தப்படும். எனவே இதுவரை ஜிமெயிலை உபயோகப்படுத்தாமல் அப்படியே விட்டவர்கள் இனி தங்கள் கணக்கினை உபயோகப்படுத்தி அக்கவுண்ட் டெலிட் ஆவதை தடுக்கலாம்.