Connect with us

automobile

கார் ஏசி நல்லா வேலை பண்ணலயா?.. அப்போ இத ஃபாலோ பண்ணுங்க..

Published

on

car ac

இந்த கோடை காலத்தில் காரில் ஏசி இல்லாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். ஏசியானது நமது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் நமக்கு கோடை காலத்தில் ஏற்படும் உடல் பிரச்சினைகளையும் வரவிடாமல் தடுக்கிறது. நாம் வெளியில் செல்lம் போது காரில் ஏசி பயன்படுத்துகின்றோம். அப்படியான ஏசியானது நன்கு திறனுடன் இயங்க நாம் சில வழிகளை கடைபிடித்தால் நல்லது. இதனால் நமது காரின் ஏசியை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

காரின் உட்புற சூடான காற்றினை வெளியே அனுப்புதல்:

use ventilation

use ventilation

நாம் காரில் ஏசியை இயக்குவதற்கு முன் காரின் ஜன்னல்களை திறந்து வைத்துகொண்டு காரின் உட்புற சூடான காற்றினை வெளியே அனுப்பும்படி செய்தபின் ஏசியை இயக்கினால் அது ஏசிக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும். மேலும் ஏசி காரினை மிக விரைவாக குளிரவைக்கும்.

நேரடி சூரிய ஒளி படாமல் விடுவது:

avoid parking car under sirect sun light

avoid parking car under sirect sun light

காரினை சூரியஒளி படும்படியான இடத்தில் விடுவதால் காரின் உட்புறம் மிக விரைவாக சூடாகிறது. காரினை சூரிய ஒளி படாத இடத்தில் விடுவதால் காரின் ஏசியானது மிகவும் அதிக திறனுடன் இயங்கும். இதனால் கார் மிக விரைவாக குளிராகிறது.

ஏசியின் ஏர் கண்டன்சரை சுத்தமாக வைப்பது:

keep air condenser as dustfree

keep air condenser as dustfree

ஏசியின் கண்டன்சர் மற்றும் ஃபில்டர் ஏசியின் கூலிங் தன்மைக்கு மிகவும் இன்றியமையாததாகும். இதில் தேவையில்லாத அழுக்குகள் படியும். இந்த அழுக்கானது ஏசியின் திறனை குறைக்கிறது. எனவே இந்த கண்டன்சரை நாம் சுத்தமாக வைப்பதனால் நாம் ஏசியினை மிகவும் திறம்பட செயல்பட வைக்கலாம்.

ரீசர்குலேஷன் மோடை உபயோகிப்பது:

use recirculation  mode

use re-circulation mode

காரில் ஏசியினை ஆன் செய்தவுடன் ரீசர்குலேஷன் மோடை உபயோகிப்பதால் ஏசியானது வெளிக்காற்றை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. இதனால் நாம் சிறந்த கூலிங்கை அனுபவிக்கலாம். மேலும் காரின் ஏசியினை அடிக்கடி சரிவீஸ் செய்வதின் மூலமும் இதனை பாதுகாக்கலாம்.

ஆட்டோமேட்டிக் மோடினை உபயோகிப்பது:

use automatic mode

use automatic mode

காரின் உள்ள ஆட்டொமேட்டிக் மோடினை உபயோகிப்பதன் மூலம் காரின் வெப்பநிலை சமநிலையில் வைக்கப்படுகிறது. இது ஏசியில் உள்ள காற்றாடியின் வேகத்தினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இவ்வாறான முறைகளை கையாள்வதின் மூலம் நாம் நமது காரின் ஏசியினை பாதுகாக்கலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *