செயற்கை இனிப்பூட்டிகளில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா!.. அப்போ கண்டிப்பா யூஸ் பண்ணாதீங்க!..

நமது நாட்டில் சர்க்கரையை என்பதை எந்த ஒரு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தும் முதன்மை பொருளாகவே கருதுகின்றோம். அப்படியான சர்க்கரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு எதிரியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக நாட்டுசர்க்கரை, பனங்கற்கண்டு போன்ற இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்தலாம். சமீப காலத்தில் ஆர்டிஃபிசியல் சுகர்(Artificial Sweetner)  என அழைக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் மக்களை பெரிதும் கவர்கின்றன. இந்த வகை சர்க்கரைகளில் கலோரியானது மிகவும் குறைவு. அதனாலேயே மக்கள் பெரும்பாலும் இதனை விரும்புகின்றனர். இவ்வாறான இனிப்புகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு உடல் சார்ந்த பல பிரச்சினைகள் வருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என பார்க்கலாம்.

artificial sweetners

உடல் எடை அதிகரிப்பு:

weight gain problems

செயற்கை இனிப்பூட்டிகள் பொதுவாக குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் இதனை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பயன்படுத்துவர். ஆனால் உண்மை என்னவென்றால் இது உடலில் கலோரிகளை குறைப்பதால் நமது உடலிற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போவதால் நமக்கு அதிகப்படியான பசியையும், அதிக உணவினை உட்கொள்ளவும் செய்கிறது.

மனநிலை சம்பந்தமான பிரச்சினைகள்:

mood disorders

மூளையின் நரம்புகள் வழியாக மூளைக்கு செல்லகூடிய தகவல்கள் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது. இது மனிதர்களிடையே அவர்களில் நடத்தைகளையும் மனநிலைமையையும் மாற்றுகிறது. இது மூளையின் செரிடினின் எனும் வேதிபொருள் உருவாவதை குறைக்கிறது.

கல்லீரல் பாதிப்பு:

liver problems

இந்த வகை இனிப்பூட்டிகளை உபயோகிப்பதால் நமது கல்லீரலில் டிரைகிளிசரைடு எனும் வேதிபொருள் அதிக அளவில் சுரக்க செய்வதால் நமது கல்லீரலுக்கு இது தீங்காக அமைகிறது.

வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்:

stomach problems

செயற்கை இனிப்பூட்டிகள் நமது வயிற்றில் உள்ள சில வயிறு சம்பந்தமான நுண்ணுயிர்களின் அமைப்பினை மாற்றுவதால் இது நமது வயிற்றில் உப்பிசம், வயிற்றுபோக்கு போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

நோய்காரணிகளை அதிகப்படுத்துகிறது:

diabates

இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் டைப்-2 டயாபடிஸ், இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் போன்றவைகளை உண்டுபண்ணுகின்றன. மேலும் இது நரம்பு சம்பந்தபட்ட வேதிபொருட்களின் அமைப்பை மாற்றுவதனால் தலைவலி மற்றும் மைக்ரேன் என அழைக்கப்படும் ஒற்றை தலைவலியையும் உண்டுபண்ணுகின்றன.

எனவே எந்த ஒரு செயற்கையான பொருளை நாம் உபயோகிக்கும் முன் நமது குடும்பநல மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் அதனை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago