life style
உங்க செல்ல நாயை டிரெய்ன்ல கொண்டுபோக முடியுமா.. ரயில்வே என்ன சொல்கிறது?
வளர்ப்புப் பிராணிகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி குறித்து சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கின்றன.
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது குடும்பத்துடன் உங்கள் வளர்ப்புப் பிராணிகளையும் ரயிலில் கொண்டு செல்ல முடியும். இதற்காக நீங்கள் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். நாய்கள், பூனைகள் மட்டுமல்ல ஏன் உங்கள் செல்ல வளர்ப்புப் பிராணிகலாக இருக்கும் குதிரைகள், யானைகளைக் கூட ரயிலில் கொண்டுசெல்லலாம் என்கிறார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.
* அளவில் பெரிய பிராணிகளாக இருந்தால் அவற்றை லக்கேஜ் வேனில் கொண்டு செல்லலாம்.
* பயணிகள், வளர்ப்புப் பிராணிகளை ஏசி முதல் வகுப்பில் தங்களோடு கொண்டு செல்ல அனுமதி உண்டு. இரண்டாம் வகுப்பு – மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச்களில் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.
* உங்கள் டிக்கெட்டோடு அந்த வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேகக் கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டும்.
* லக்கேஜ் பெட்டிகளில் பயணம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்னர் ரயில்வேயின் பார்சல் அலுவலகத்தில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர வேண்டும்.
* அந்த பிராணிகளுக்கு எந்தவொரு தொற்று நோயும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். இந்த சான்று பயணிக்கும் நாளுக்கு முந்தைய 24 முதல் 48 மணி நேரத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்.
* அதேபோல், வளர்ப்புப் பிராணிகளுக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் மருத்துவ ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.
* சின்ன கூண்டுகளில் அடைத்து வளர்ப்புப் பிராணிகளை எந்தவொரு கோச்சிலும் கொண்டுசெல்லலாம். ஆனால், அதற்குரிய மருத்துவ ஆவணங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், அவற்றுக்கு லக்கேஜ் கட்டணம் பிரத்யேகமாக செலுத்த வேண்டும்.
* இதுகுறித்த கூடுதல் விவரங்களை ரயில்வே துறையின் கமர்ஷியல் டிபார்ட்மெண்டை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…