latest news
Vlog எடுப்பவர்களுக்கென சந்தையில் அறிமுகமாகும் கெனான் கேமரா.. இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
தற்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இல்லை. இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே உலகில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது பெரும்பாலானோர் தங்களின் தினசரி வேலைகள், தாங்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் இடங்கள், தாங்கள் செல்லும் விழாக்கள் என அனைத்தையுமே vlog என எடுத்து கொண்டு அதனை யுடியூப் இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதன் மூலம் வருமானம் பெறவும் பழகிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் பயன்படும் வகையில் ஐரோப்பாவின் பிரபல கேமரா நிறுவனமான கெனான் நிறுவனம் பவர்ஷாட் வி10(Powershot V10) எனும் சிறிய வடிவில் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும்படியான கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் 211கிராம் எடை மற்றும் பவர்ஷாட் வி10 வசதி இதனை நாம் எங்கு வேண்டுமானலும் நமது பாக்கெட்டில் வைத்து கொண்டு கூட செல்லும்படியாக அமைந்துள்ளது. மேலும் இந்த பவர்ஷாட் வி10 உயர்தர ஸ்பீக்கர் வசதியையும் மிக துல்லியமான 4K UHD படங்களை எடுக்கும்படியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மிக நெருக்கமான இடங்களில் கூட நம்மால் மிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். இது 2.0 இன்ச் முன்புற திரையையும் மேலும் இதனை நமது வசதிக்கேற்ப திருப்பும்படியும் அமைந்துள்ளது.
மேலும் இந்த கேமராவில் 1.0 இன்ச் சென்சார் நமக்கு 4K வீடியோ தரத்தை மிக சிறப்பாக தருகின்றது. இதி 14 வகையான ஃபில்டர் எஃபெக்ட்டும் உள்ளது. இந்த பவர்ஷாட் வி10 கெனான் கனெக்ட் ஆப் உடன் எளிமையாக இணைவதால் இதன் மூலம் நாம் எடுக்கும் வீடியோக்களை எளிமையாக அந்த செயலிக்கு அனுப்ப முடியும். மேலும் இந்த கேமராவில் யூஎஸ்பி, எச்.டி.எம்.ஐ போர்ட் வசதிகளும் உள்ளன. எனவே நீங்களும் VLOG எடுப்பவராக இருந்தால் இந்த கேமரா உங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.