Connect with us

life style

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது இந்த பழம்…! இப்பவே சாப்பிடுங்க..!

Published

on

கொய்யாப்பழம் வளர் இளம் பருவத்தினருக்கு சிறந்த ஊட்டச்சத்துமிக்க பழம். சுட்டிக்குழந்தைகளும், ஓடி விளையாடும் சிறுவர்களும் ரொம்ப ஆர்வத்தோடு சாப்பிடும் பழம். இது இனிப்பாக இருப்பதால் குழந்தைகளும் ஆர்வமுடன் சாப்பிடுகின்றனர். செம்பு சத்து அதிகமாகக் காணப்படும் பழம் இதுதான்.

தைராய்டு சுரப்பியை ஊக்குவித்து உடல் நலனுக்குத் தேவையான ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது.

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக சேராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி சுத்தமாக்குகிறது. ரத்த அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

Koyya2

வைட்டமின் சி சத்து அதிகளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது. தினமும் காலை, மதியம் கொய்யா சாப்பிடுவது மிகவும் நல்லது. அல்சர் மற்றும் குடற்புண்கள் உள்ளவர்களுக்கு கொய்யா மாமருந்து.

Koyya3

வைட்டமின் பி 9 மற்றும் போலிக் அமிலமும் அதிகளவில் உள்ளது. இதனால் கர்ப்பிணிகளும் கொய்யா பழம் சாப்பிடலாம். இதில் உள்ள மெக்னீசியம் நரம்பு மண்டலத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. இதனால் மன அழுத்தம் வருவது குறைகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பல் ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.

google news