latest news
மென்மேலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ் ஆப்..இதுவும் நல்லாதான் இருக்கு..
பிரபல மெசேஜிங் நிறுவனமான வாட்ஸ் ஆப் சமீபமாக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இது தற்போது இந்த செயலியில் நுழைவதற்கு நமது மொபைல் எண்ணிற்கு பதிலாக யூசர் நேம் வைத்து லாகின் பண்ணும்படியான புதிய வசதியினை அறிமுகப்படுத்தியது. அதனைபோல் இந்த நிறுவனம் மிக விரைவில் தங்களது ஸ்கிரினை ஷேர் செய்யும்படியான புதிய வசதியினை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் இனி உபயோகிப்பாளர்கள் தங்களின் மொபைல் ஸ்கீரினை இனி மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த வசதியினை பெற உபயோகிப்பாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பில் காலினை தொடங்க வேண்டும். பின் அதன் கீழ் பகுதியில் இடதுபுறம் உள்ள ஸ்கிரின் ஷேர் பட்டனை தொடவும். இந்த முறையின் மூலம் நாம் நமது மொபைலின் திரை முழுவதையும் மற்றவர்களுக்கு தெரியும்படி பகிர்ந்து கொள்ளலாம்.
இதனை இயக்கும் பொழுது இந்த செயலியானது நமது வாட்ஸ் ஆப்பில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இயக்கும்படியான அனுமதியை பெற்று கொள்ளும். இது நமக்கு மிகுந்த பாதுகாப்பையும் கொடுக்கிறது. இதன்படி நாம் யாருக்கு ஸ்கிரீனை ஷேர் செய்கிறோமோ அவர்களும் நாம் பயன்படுத்தும் அதே வெர்ஷன் உள்ள வாட்ஸ் ஆப் செயலியை உபயோகித்தால் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
தற்சமயம் இந்த வசதி சோதனையில் இருப்பதாகவும் இன்னும் மிக சில வாரங்களில் இது நடைமுறைக்கு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் பிரைவேட் சாட், மெசேஜை லாக் செய்யும் வசதி என பல வசதிகளை புகுத்தி வருகிறது. மேலும் சமீபத்தில் நாம் பிறருக்கு அனுப்பும் தகவல்களை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியினையும் அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.