latest news
பேடிஎம்மில் புதிதாக இவ்வளவு வசதிகளா?.. அப்போ இனி கவலையே இல்ல..
பணத்தை பர்ஸில் எடுத்து சென்ற காலம் மாறி இப்போது அனைவருமே பணத்தினை மொபைல் போன் மூலம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். அதெற்கென்று பல்வேறு செயலிகளும் வந்த வண்ணம் உள்ளன. இதில் பணம் செலுத்துவது மக்களுக்கு மிக எளிமையான ஒரு வழியாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம்தான் பேடிஎம் எனப்படும் ஒரு வகையான செயலி. இந்த செயலியின் மூலம் நாம் எங்கு வேண்டுமானாலும் பணத்தினை எளிமையாக செலுத்தலாம். இந்த நிறுவனமானது தற்போது பல புதிய வசதிகளை இந்த செயலியில் கொண்டு வந்துள்ளது.
இந்த நிற்வனம் தற்போது iOS தளத்தில் UPI lite, UPI யில் கிரெடிட் கார்டு வசதியையும், ஸ்பிலிட் பில்(split bill) போன்ற பல்வேறு வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவந்துள்ளது.
ருபே கிரெடிட் கார்டு வசதி:
நமது ருபே கிரெடிட் கார்டின் தகவல்களை இந்த செயலியில் பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு முறையும் நாம் பணம் செலுத்தும் போது QR குறியீட்டினை ஸ்கேன் செய்வதின் மூலம் நாம் பணம் செலுத்த முடியும். இதனால் நாம் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் போது OTPக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பேடிஎம் UPI லைட்:
இதன் மூலம் நாம் மிக வேகமாக பணத்தினை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் பரபரப்பான நேரத்தில்(Peak Hours) கூட நாம் இதன் மூலம் பணத்தினை சுலபமாக அனுப்ப முடியும்.
பில்களை பகிர்ந்து கொள்ள முடியும்:
இந்த வசதியின் மூலம் நாம் செய்யும் பணவர்த்தனையை நமது குழுவிற்கு பகிர முடியும். மேலும் நாம் பரிவர்த்தணையை நமது குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் தெரியும்படி டேக்(Tag) செய்தும் கொள்ளலாம்.
இப்படியான பல சிறப்பம்சங்களை தற்போது பேடிஎம் கொண்டு வந்துள்ளது.