Categories: latest newslife style

சமையலை தவிர தேங்காய் எண்ணையை இத்தனை வழிகளில் யூஸ் பண்ணலாமா?..

தேங்காய் எண்ணெய் தென்னிந்தியாவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இதனை பலர் சமையலில் பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெயில் பல்வேறு ஊட்ட சத்துக்களும் அடக்கியுள்ளன. குறிப்பாக புரதசத்து, கார்போஹைட்ரேட், இரும்புசத்து போன்ற எண்ணற்ற சத்துகளும் அடங்கியுள்ளன. இதனை சமையலைத் தவிர பொதுவாக முடி பராமரிப்பிற்கும் சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்துகின்றானர். இதையும் தாண்டி தேங்காய் எண்ணெயை பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது:

தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் டிரைகிளிசரைடு(MCT) எனப்படும் ஒருவகை கொழுப்பு உள்ளது. இதனை நமது உடம்பாடனது எளிமையாக உறிஞ்ச கூடியது. மேலும் இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதுடன் மூளை சம்பந்தபட்ட நரம்புகளையும் நன்கு வேலை செய்ய வைக்ககூடியது. எனவே தினமும் நாம் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் இது நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை சீராக வைகின்றது.

boosts immunity power

பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு:

ஆயில் புல்லிங் எனப்படும் வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது நமது பற்களுக்கும் தொண்டைக்கு  சிறந்த பயன்களை விளைவிக்கிறது. சிறிதளவு தேங்காய் எண்ணெயை 10 நிமிடங்களுக்கு வாயில் வைத்து கொப்பளிப்பதால் நமது பல்லில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறி பற்களுக்கு நன்மை பயக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் லாரிக் ஆசிட் எனும் பாக்டீரியாவை எதிர்க்கும் பொருள் இருப்பதால் இது பற்களில் ஏற்படும் தொற்றுகளை சரிசெய்கிறது.

reduce toxins in teeth

ஒப்பனை நீக்கியாக (Makeup remover) செயல்படுகிறது:

பெருப்பாலான மேக்கப் ரிமூவர்கள் நமது முகத்தில் எரிச்சலை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட ரிமூவர்களை நாம் உபயோகிக்காமல் அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் நமது முகத்தில் உள்ள நீர்தன்மை குறையாமல் நமது முகத்தினை பொலிவுடன் வைக்க செய்யும்.

protect skin

பாக்டீரியாக்களிலிருந்து விடுபட:

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஆண்டி மைக்ரோபியல் தன்மை கொண்டது. எனவே இதனை நாம் அன்றாடம் குளிப்பதற்கு முன் நமது உடலில் 10 நிமிடங்கள் தேய்த்து ஊற வைத்தால் நமது உடம்பில் சருமம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் இருக்கும். மேலும் இதனை அடிப்பட்ட காயங்களில் அப்ளை செய்வதனால் தொற்றிலிருந்து நமது உடலை காக்கலாம்.

reduce bacterial infection

இவ்வாறு தேங்காய் எண்ணெயை பல வகைகளில் உபயோகப்படுத்தலாம்.

amutha raja

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago