நமது உடலில் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடுவதால் நமக்கு சர்க்கரை நோய் எனும் தீரா நோய் உண்டாகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு என்ற ஒன்று இல்லை. ஆனால் நாம் நம் அன்றாட உணவு பழக்க வழக்கத்திலும் வாழ்வியல் முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதனை நாம் வராமல் தடுக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
சர்க்கரையின் அளவு:
சாதாரணமாக நாம் உணவு சாப்பிடுவதற்கு முன் 100mg/dl யை விட குறைவான அளவு சர்க்கரைதான் நமது உடலில் இருக்க வேண்டும். இதன் அளவு 125mg/dl யை விட அதிகமாக இருந்தால் அதனை முழு சர்க்கரை நோய் எனவும் 100 முதல் 125mg/dl இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது எனவும் அறிந்துகொள்ளலாம்.
நீர்சத்து குறைதல்:
நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால் நமது உடலின் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை அதிக செறிவு தன்மை உடையதாக மாற்றுகிறது. இதனால் நமது இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது.
சரியான விகிதத்தில் மருந்து எடுத்து கொள்ளாமல் போவது:
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க மற்றொரு காரணமாய் கருதப்படுவது சரியான அளவு மருந்து எடுத்து கொள்ளாமல் போவது. இவ்வாறு செய்வதால் நமது உடல் அந்த மருந்தினை ஏற்று கொள்ளாமல் நமது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே நாம் அவ்வபோது இரத்த சர்க்கரையின் அளவை கண்கானித்து அதற்கேற்றார்போல் சரியான விகிதத்தில் மருந்தினை எடுத்து கொள்ள வேண்டும்.
மற்ற மருந்தினை எடுத்து கொள்வதால்:
ஒருவேளை நாம் ஸ்டெராய்டு போன்ற மற்ற மருந்தினை எடுத்துகொண்டாலும் நமது இரத்த சர்க்கரையின் அளவு சீராக இல்லாமல் போகலாம். இந்த ஸ்டெராய்டு நாம் உண்ணும் சர்க்கரை நோயின் மருந்துடன் கலந்து விடுவதால் அதனை ஒழுங்காய் செயலாற்ற விடாமல் செய்கிறது.
மன அழுத்தம்:
மன அழுத்தம் என்பது ஒரு மிக மோசமான நோயாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பதால் அவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகமாகி அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.
தூக்கமின்மை:
தூக்கம் என்பது உடலுக்கு மட்டும் ஓய்வு தரும் விஷயம் அல்ல. தூக்கத்தினால் நமது உடலுக்குள் பல்வேறு உயிரியல் சார்ந்த செயல்களும் நடக்கின்றன. நாம் நன்கு தூங்குவதால் நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்கும். இதனால் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.
எனவே நாம் நமது உணவு பழக்க வழக்கத்திலும் மற்றும் மனதையும் சரியானபடி வைத்துகொண்டால் நமக்கு தேவையில்லாத பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…