Connect with us

govt update news

என்ன இந்த நாடுகளுக்கெல்லாம் செல்ல விசா தேவையில்லையா!..அது எந்தெந்த நாடுகள்னு தெரிஞ்சிகனுமா?..

Published

on

visafree countries

விசா என்பது வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு ஆவணம் ஆகும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இது மிகவும் முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணங்கள் இல்லாமல் கூட நாம் பெரும்பாலான நாடுகளுக்கு செல்லலாம். ஒரு வேளை நாம் சில வேடிக்கைகளுக்காக வெளிநாடு செல்ல விரும்பினால் நாம் இந்த வகை நாடுகளுக்கு செல்ல திட்டமிடலாம். ஆனால் இந்த வகை நாடுகளில் நாம் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் இருக்குமா என்பதை கூற முடியாது. அது என்னென்ன நாடுகள் எனப் பார்க்கலாம்.

பூட்டான்:

bhuttan

bhuttan

பூட்டான் என்பது மலைகள் மற்றும் சமவெளிகளை கொண்ட மிக அழகான நாடாகும். மேலும் இதன் இயற்கையின் அழகு தனித்துவம் வாய்ந்தது. இந்த நாட்டை இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரும் விரும்புவர். இந்தியர்களை சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் விசா இல்லாமல் இங்கு அனுமதிப்பர். அதற்கு நாம் நமது அடையாள சான்றை அளிப்பது முக்கியம்.

ஃபிஜி:

fiji

fiji

மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தேன்நிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற இடம் ஃபிஜி ஆகும். இங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால் இங்கு பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலாவிற்கு வருவார்கள்.

பார்படாஸ்:

barbadous

barbadous

இது ஒரு மிக சிறந்த கரீபியன் நாடு. இந்த நாட்டிற்கு பொதுவாக கோடைகால விடுமுறைக்கு மக்கள் செல்வர். எனவே சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க இந்த இடம் சிறந்த இடமாக கருதப்படுகிறது.

ட்ரினிடடு(Trinidad) மற்றும் டொபகோ(Tobago):

trinidad

trinidad

இந்த நாடுகளில் பொழுது போக்கு மட்டுமல்லாமல் அங்கு செல்பவர்களுக்கு மன அமைதியை தரக்கூடிய ஒரு இடமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் இது நமது இந்தியாவில் உள்ள கோவாவை போன்று இருக்குமாம்.

நேபால்:

nepal

nepal

நேபால் என்பது பலரின் கனவு இடமாகவே இன்றளவும் உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் செலவு என்பது மிகவும் குறைவே. எனவே இங்கு நாம் விசா என அழைக்கப்படும் தகுதி சீட்டு இல்லாமல் பயனிக்கலாம்.

மொரிஷியஸ்:

mauritius

mauritius

மொரிஷியஸ் நாடும் பெரும்பாலும் ஜோடிகள் அதிகமாக விரும்பும் ஒரு இடமாகும். மேலும் இதன் கடற்கரை மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கும். எனவே நமது பயணங்களை இனிமையானதாக்க இப்படியான இடங்களுக்கு சென்று நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிடலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *