Connect with us

life style

செம்பருத்தி பூவில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா! அப்போ கண்டிப்பா சாப்டுங்க..

Published

on

hibiscus

அன்றாட வாழ்வில் நாம் பல வகையான பூக்களை பார்க்கின்றோம். ஆனால் அதில் சில பூக்கள் வெறும் பூக்களாக மட்டுமே பயன்படுவதில்லை. அதை தாண்டி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டவைகளாக இருக்கின்றன.

அப்படிபட்டவைகளில் ஒன்றுதான் செம்பருத்தி பூ. இந்த செடியின் இலை, பூ என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவைதான். இந்த பூவை நாம் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் காணலாம். ஆனால் பெரும்பாலோர்க்கு இதனுடைய நற்பயன்கள் தெரிவதில்லை.

ஹைபிஸ்கஸ் ரோசா சைனென்சிஸ் எனும் தாவர பெயர் கொண்ட இந்த பூ சீன ரோஜா எனவும் அழைக்கபடுகிறது.

remedy for body heat

remedy for body heat

இந்த செம்பருத்தி பூ நமது உடம்பில் உள்ள சூட்டை குறைத்து நமது உடம்பிற்கு குளிர்ச்சி கொடுக்க கூடியது. தினமும் காலையில் 5 இதழ் கொண்ட பூவில் இதழ்களை நன்கு கழுவி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நமது உடம்பிற்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். இப்பூவை தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வந்தால் வாய்புண் போன்ற வாய் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்துக்கும் மிக சிறந்த தீர்வாக அமையும்.

healthy heart

healthy heart

செம்பருத்தி பூவின் இதழ்களை காய வைத்து அதனை பொடியாக்கி காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வர இதயம் மிகவும் பலமாவதுடன் இதய நோயாளிகளுக்கு வரும் படபடப்பு, இதய வலி போன்றவைகளிலிருந்தும் விடுபடலாம்.

reduce periods cramps

reduce periods cramps

பெண்கள் இந்த பூவினை மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் நெய்யில் வதக்கி சாப்பிடுவதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான உதிரப்போக்கை சரி செய்து சீராக ஆக்கும். மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கர்ப்பபை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்யும்.

reduce knee pain

reduce knee pain

மேலும் செம்பருத்தி பூவை தொடர்ந்து சாப்பிடுவதால் முதுகு வலி, மூட்டு வலி போன்றவை சரியாகும். செம்பருத்தி பூவை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.

இப்படிப்பட்ட அதீத குணம் கொண்ட செம்பருத்தி இலையை நாம் அன்றாட வாழ்வில் சேர்த்தால் நமது உடம்பும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

life style

உங்க செல்ல நாயை டிரெய்ன்ல கொண்டுபோக முடியுமா.. ரயில்வே என்ன சொல்கிறது?

Published

on

By

வளர்ப்புப் பிராணிகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி குறித்து சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கின்றன.

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது குடும்பத்துடன் உங்கள் வளர்ப்புப் பிராணிகளையும் ரயிலில் கொண்டு செல்ல முடியும். இதற்காக நீங்கள் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். நாய்கள், பூனைகள் மட்டுமல்ல ஏன் உங்கள் செல்ல வளர்ப்புப் பிராணிகலாக இருக்கும் குதிரைகள், யானைகளைக் கூட ரயிலில் கொண்டுசெல்லலாம் என்கிறார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.

* அளவில் பெரிய பிராணிகளாக இருந்தால் அவற்றை லக்கேஜ் வேனில் கொண்டு செல்லலாம்.

* பயணிகள், வளர்ப்புப் பிராணிகளை ஏசி முதல் வகுப்பில் தங்களோடு கொண்டு செல்ல அனுமதி உண்டு. இரண்டாம் வகுப்பு – மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச்களில் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

* உங்கள் டிக்கெட்டோடு அந்த வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேகக் கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டும்.

* லக்கேஜ் பெட்டிகளில் பயணம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்னர் ரயில்வேயின் பார்சல் அலுவலகத்தில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர வேண்டும்.

* அந்த பிராணிகளுக்கு எந்தவொரு தொற்று நோயும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். இந்த சான்று பயணிக்கும் நாளுக்கு முந்தைய 24 முதல் 48 மணி நேரத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்.

* அதேபோல், வளர்ப்புப் பிராணிகளுக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் மருத்துவ ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.

* சின்ன கூண்டுகளில் அடைத்து வளர்ப்புப் பிராணிகளை எந்தவொரு கோச்சிலும் கொண்டுசெல்லலாம். ஆனால், அதற்குரிய மருத்துவ ஆவணங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், அவற்றுக்கு லக்கேஜ் கட்டணம் பிரத்யேகமாக செலுத்த வேண்டும்.

* இதுகுறித்த கூடுதல் விவரங்களை ரயில்வே துறையின் கமர்ஷியல் டிபார்ட்மெண்டை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…

google news
Continue Reading

latest news

30000க்குள் சிறந்த பேட்டரி தன்மையை கொண்ட மொபைல் போன்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..

Published

on

mobile phones under 30000

2023ஆம் ஆண்டில் மீடியம் விலை போன்கள் பல வந்துள்ளன. 30000க்கும் கீழ் சாம்சங், போகோ, iQOO, ஒன்ப்ளஸ்  என பல நிறுவனங்களின் மொபைல் போன்கள் உள்ளன. இவை அனைத்தும் பலவகை வசதிகளை கொண்டிருத்தாலும் சிறந்த பேட்டரித்தன்மையையும் கொண்டுள்ளன. இவ்வாறான போன்கள் எவை என பார்க்கலாம்.

Samsung Galaxy F54:

samsung galaxy f54

samsung galaxy f54

இந்த மொபைலானது 6000mAh பேட்டரி தன்மையை கொண்டுள்ளது. 2023ல் வந்த மொபைல் வகைகளில் இது ஒரு சிறந்த மொபைல். மேலும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு நீடித்து உழைக்கக்கூடியதாகும். இது 108 mp கேமராவையும், 120Hz AMOLED திரையையும் கொண்டுள்ளது. மேலும் இது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.

iQOO Neo 7:

iQOO Neo 7

iQOO Neo 7

இதன் பேட்டரி 5000mAh மற்றும் இது 120w ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை நாம் சார்ஜ் செய்யும் பொழுது 10 நிமிடங்களுக்குள் 50% சார்ஜ் ஆகி விடுமாம். அதிக மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ். இதன் விலை ரூ.27,999 ஆகும்.

POCO F5:

poco f5

poco f5

5000mAh பேட்டரி அமைப்பினை கொண்ட இந்த மொபைலானது 67w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்டது. மேலும் இதில் Snapdragon 7+Gen 2 ப்ராஸசரும் இருப்பதால் இதன் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்வதனால் நாம் ஒரு நாள் முழுவதும் மொபைலை உபயோகப்படுத்தலாம். இதன் விலை ரூ.29,999 ஆகும்.

OnePlus Nord 2T:

oneplus nord 2t

oneplus nord 2t

80w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்ட இதன் பேட்டரி 4500mAh தன்மையை கொண்டது. மேலும் இது 6.43 இன்ச் திரையினையும் 50mp கேமராவையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.28,999 ஆகும்.

Realme 11 Pro+:

realme11 pro+

realme11 pro+

இந்த மொபைலானது 5000mAh பேட்டரி தன்மையையும் 100w ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையையும் கொண்டுள்ளது. மேலும் இது 12ஜிபி RAM, 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இது 200mp பின்புற கேமராவை கொண்டுள்ளதால் இதன் கேமரா மிக துல்லியமாக படங்களை எடுக்கும். இதன் விலை ரூ.27,999 ஆகும்.

google news
Continue Reading

govt update news

என்ன இந்த நாடுகளுக்கெல்லாம் செல்ல விசா தேவையில்லையா!..அது எந்தெந்த நாடுகள்னு தெரிஞ்சிகனுமா?..

Published

on

visafree countries

விசா என்பது வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு ஆவணம் ஆகும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இது மிகவும் முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணங்கள் இல்லாமல் கூட நாம் பெரும்பாலான நாடுகளுக்கு செல்லலாம். ஒரு வேளை நாம் சில வேடிக்கைகளுக்காக வெளிநாடு செல்ல விரும்பினால் நாம் இந்த வகை நாடுகளுக்கு செல்ல திட்டமிடலாம். ஆனால் இந்த வகை நாடுகளில் நாம் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் இருக்குமா என்பதை கூற முடியாது. அது என்னென்ன நாடுகள் எனப் பார்க்கலாம்.

பூட்டான்:

bhuttan

bhuttan

பூட்டான் என்பது மலைகள் மற்றும் சமவெளிகளை கொண்ட மிக அழகான நாடாகும். மேலும் இதன் இயற்கையின் அழகு தனித்துவம் வாய்ந்தது. இந்த நாட்டை இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரும் விரும்புவர். இந்தியர்களை சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் விசா இல்லாமல் இங்கு அனுமதிப்பர். அதற்கு நாம் நமது அடையாள சான்றை அளிப்பது முக்கியம்.

ஃபிஜி:

fiji

fiji

மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தேன்நிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற இடம் ஃபிஜி ஆகும். இங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால் இங்கு பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலாவிற்கு வருவார்கள்.

பார்படாஸ்:

barbadous

barbadous

இது ஒரு மிக சிறந்த கரீபியன் நாடு. இந்த நாட்டிற்கு பொதுவாக கோடைகால விடுமுறைக்கு மக்கள் செல்வர். எனவே சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க இந்த இடம் சிறந்த இடமாக கருதப்படுகிறது.

ட்ரினிடடு(Trinidad) மற்றும் டொபகோ(Tobago):

trinidad

trinidad

இந்த நாடுகளில் பொழுது போக்கு மட்டுமல்லாமல் அங்கு செல்பவர்களுக்கு மன அமைதியை தரக்கூடிய ஒரு இடமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் இது நமது இந்தியாவில் உள்ள கோவாவை போன்று இருக்குமாம்.

நேபால்:

nepal

nepal

நேபால் என்பது பலரின் கனவு இடமாகவே இன்றளவும் உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் செலவு என்பது மிகவும் குறைவே. எனவே இங்கு நாம் விசா என அழைக்கப்படும் தகுதி சீட்டு இல்லாமல் பயனிக்கலாம்.

மொரிஷியஸ்:

mauritius

mauritius

மொரிஷியஸ் நாடும் பெரும்பாலும் ஜோடிகள் அதிகமாக விரும்பும் ஒரு இடமாகும். மேலும் இதன் கடற்கரை மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கும். எனவே நமது பயணங்களை இனிமையானதாக்க இப்படியான இடங்களுக்கு சென்று நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிடலாம்.

google news
Continue Reading

latest news

ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து விட்டீர்களா?..இந்த முறைகளை ஃபாலோவ் பண்ணுங்க..

Published

on

aadhaar voter id linkage

சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டினை இணைக்கும் படியான அறிவிப்பினை வெளியிட்டது. இவ்வாறு இணைப்பதால் ஒரு நபரே ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுக்க முடியும். எனவே தேர்தல் ஆணையமானது இந்த திட்டத்தை கட்டாய திட்டமாக்கியது. இவ்வாறு இணைப்பதற்கு நாம் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இதனை நாம் நமது மொபைல் போன் மூலமாகவே மிக எளிமையாக பண்ணலாம். இவ்வாறு ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் எவ்வாறு இணைப்பது என்று தெரியவில்லையா?.இதோ கீழே உள்ள படி நிலைகளை பின்பற்றவும்.

  1. ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் முதலில் ‘Voter Helpline App‘ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. செயலியினுள் நுழைந்தபின் ‘I Agree‘  என்ற பட்டனை அழுத்தி ‘Next‘ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  3. Voter Registration என்ற பட்டனை அழுத்தியபின் ‘Electoral Authentication Form‘ ஐ செலக்ட் செய்யவும்.
  4. ‘let’s Start‘ என்ற பட்டனை அழுத்தியபின் நமது ஆதார் கார்டுடன் இணைந்திருக்கும் மொபைல் எண்ணை கொடுக்கவும். பின் OTP யானது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்து சேரும்.
  5. OTP யை கொடுத்தபின் ‘Yes I have voter ID’ என்ற பட்டனை அழுத்தவும்.
  6. நமது வாக்களர் அட்டையின் (EPIC) எண்ணை கொடுத்தபின் நமது மாநிலத்தை தேர்வு செய்யவும். பின் ‘Fetch Details‘ என்ற பட்டனை அழுத்தவும்.
  7. Proceed’ என்ற பட்டனை அழுத்தியபின் நமது தகவல்களை சரி செய்து பின் ‘Next’ என்ற பட்டனை அழுத்தவும்.
  8. பின் அதனுள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து ‘Done’ என்ற பட்டனை அழுத்தவும்.
  9. பின் Form 6B யில் நமது தகவல்களை சரிபார்த்து ‘Confirm‘ என்ற பட்டனை அழுத்தவும்.

இவ்வாறான செயல்முறைகளின் மூலம் நாம் நமது ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். மேலும் http://www.nvsp.in என்ற முகவரிக்கு சென்று நமது ஆதார் கார்டு- வாக்காளர் அடையாள அட்டை இணைந்துவிட்டதா எனவும்  அறியலாம்.

google news
Continue Reading

Finance

fast tag wallet-ல் இருந்து பணத்தினை திரும்ப பெற வேண்டுமா?.. அப்போ இத ஃபாலோவ் பண்ணுங்க..

Published

on

fast tag logo

கார் உபயோகிப்பவர்கள் அனைவருமே தற்போது ஃபாஸ்ட் டேக் ஐடியை வைத்துள்ளனர். இந்த ஃபாஸ்ட் டேக் RFIDயானது நமது காரின் முன்புறம் ஒரு ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டிருக்கும். டோல் பூத்களில் பணத்தினை கட்டுவதற்கு இது உதவுகிறது. இதற்கென்று தனி கணக்கு இருக்கும். இதனை அவ்வப்போது தேவைப்படும் நேரத்தில் நாம் ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம். இந்த கணக்கினை எந்த வங்கியின் மூலமாக வேண்டுமானலும் நாம் ஆரம்பித்து கொள்ளலாம். இந்த கணக்கானது ஃபாஸ்ட் டேக் சர்வீஸ் ப்ரொவைடர் (FASTag Service Provider) மற்றும் பல செயலிகள் மூலமாக நாம் பராமரித்து கொள்ளலாம். இவ்வாறான கணக்கினை ஒரு வேளை நாம் நீக்க நினைத்தால் அதனை அந்தந்த வங்கிகளில் உள்ள சர்வீஸ் ப்ரொவைடரின் மூலம் நாம் நீக்கி கொள்ளலாம். எந்தெந்த வங்கிக்கு எவ்வாறான முறையில் நாம் இந்த கணக்கினை நீக்கலாம் என பார்ப்போம்.

FASTag

FASTag

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:

இந்த வங்கியின் வாடிக்கையாளர் மையத்தினை அனுக வேண்டும் அல்லது வங்கியின் கிளைக்கு சென்று நீக்கி கொள்ளலாம்.

வாடிக்கையாளர் எண்: 1800 2100 104

எச்.டி.எஃப்.சி வங்கி:

  1. Fast tag portal-> user ID மற்றும் password
  2. service Request-> Generate Service Request
  3. select closure request to RFID Tag or Wallet

வாடிக்கையாளர் எண்: 1800 120 1248

ஆக்ஸிஸ் வங்கி:

வாடிக்கையாளர் எண்: 1800 419 8585 அல்லது [email protected] என்ற முகவரிக்கும் சென்று நாம் பணத்தினை திரும்ப பெற்று கொள்ளலாம்.

எஸ்.பி.ஐ வங்கி:

  1. Fast tag portal-> user ID மற்றும் password
  2. service Request-> Generate Service Request
  3. select closure request to RFID Tag or Wallet

வாடிக்கையாளர் எண்: 1800 120 4210

அமேசான்:

வாடிக்கையாளர் எண்: 1800 266 1515

செயலி வழியாக பெற: Amazon pay> Help & FAQs> Contact us> Email or Phone

ஏர்டெல்:

வாடிக்கையாளர் எண்: 400 981 6101

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்:

http://www.nhai.gov.in என்ற இணையதளத்திற்கும் சென்று நமது கணக்கினை நீக்கலாம்.

பேடிஎம் செயலி:

  1. இதன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  2. பதிவு செய்யப்பட்ட மொபை எண்ணின் மூலமாக லாகின் செய்யவும்
  3. search bar> Manage FASTag> கிளிக் செய்யவும்
  4. எந்த கணக்கினை மூட வேண்டுமோ தன் மீது கிளிக் செய்யவும்.
  5. பின் கணக்கினை நிறுத்துவதை உறுதி செய்தபின் நமது கணக்கில் உள்ள தொகையானது நமது வங்கிக்கு மாறி கொள்ளும்.

google news
Continue Reading

Trending