அன்றாட வாழ்வில் நாம் பல வகையான பூக்களை பார்க்கின்றோம். ஆனால் அதில் சில பூக்கள் வெறும் பூக்களாக மட்டுமே பயன்படுவதில்லை. அதை தாண்டி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டவைகளாக இருக்கின்றன.
அப்படிபட்டவைகளில் ஒன்றுதான் செம்பருத்தி பூ. இந்த செடியின் இலை, பூ என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவைதான். இந்த பூவை நாம் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் காணலாம். ஆனால் பெரும்பாலோர்க்கு இதனுடைய நற்பயன்கள் தெரிவதில்லை.
ஹைபிஸ்கஸ் ரோசா சைனென்சிஸ் எனும் தாவர பெயர் கொண்ட இந்த பூ சீன ரோஜா எனவும் அழைக்கபடுகிறது.
இந்த செம்பருத்தி பூ நமது உடம்பில் உள்ள சூட்டை குறைத்து நமது உடம்பிற்கு குளிர்ச்சி கொடுக்க கூடியது. தினமும் காலையில் 5 இதழ் கொண்ட பூவில் இதழ்களை நன்கு கழுவி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நமது உடம்பிற்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். இப்பூவை தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வந்தால் வாய்புண் போன்ற வாய் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்துக்கும் மிக சிறந்த தீர்வாக அமையும்.
செம்பருத்தி பூவின் இதழ்களை காய வைத்து அதனை பொடியாக்கி காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வர இதயம் மிகவும் பலமாவதுடன் இதய நோயாளிகளுக்கு வரும் படபடப்பு, இதய வலி போன்றவைகளிலிருந்தும் விடுபடலாம்.
பெண்கள் இந்த பூவினை மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் நெய்யில் வதக்கி சாப்பிடுவதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான உதிரப்போக்கை சரி செய்து சீராக ஆக்கும். மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கர்ப்பபை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்யும்.
மேலும் செம்பருத்தி பூவை தொடர்ந்து சாப்பிடுவதால் முதுகு வலி, மூட்டு வலி போன்றவை சரியாகும். செம்பருத்தி பூவை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.
இப்படிப்பட்ட அதீத குணம் கொண்ட செம்பருத்தி இலையை நாம் அன்றாட வாழ்வில் சேர்த்தால் நமது உடம்பும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…