Connect with us

govt update news

ஆதார் கார்டை இங்க கூட அப்டேட் செய்யலாம்… அலைய தேவையில்லை… இதோ தெரிஞ்சுக்கோங்க..!

Published

on

ஆதார் கார்டை இலவசமாக ஆன்லைனில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொதுமக்களின் பயன்பாட்டில் பல ஆவணங்கள் இருக்கின்றது. அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஆதார் அட்டை. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டும் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், ஒரு முக்கிய தேவையாக உள்ளது. வங்கி மற்றும் சிம்கார்டு வாங்குவது போன்றவற்றிற்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணம்.

இந்நிலையில் ஆதார் அட்டையை வாங்கியவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டியது என்பது கட்டாயம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பாக ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆதார் அட்டை தகவலை புதுப்பிக்க வேண்டியது அவசியம். இதனை ஆதார் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 10 ஆண்டுக்கு ஒரு முறை அதிலுள்ள தகவல்களை நீங்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும். ஆன்லைன் அல்லது ஆதார் மையத்தில் நீங்கள் இந்த சேவையை செய்ய முடியும். தபால் நிலையங்களிலும் ஆதாரில் உள்ள தகவல்களை புதுப்பிக்கலாம். இதனால் மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்த கட்டணத்தையே தபால் அலுவலகத்தில் கட்டினால் போதும். மக்கள் ஆதார் மையத்தில் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ள முடியும். ஆதார் புதுப்பித்தல் அடிப்படை தேவையான பெயர், மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி, மின்னஞ்சல், முகவரி புகைப்படம், பயோமெட்ரிக் அப்டேட் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

ஆன்லைனிலும் ஆதாரை நீங்கள் இலவசமாக புதுப்பிக்க முடியும். மை ஆதார் போர்ட்டல்  அல்லது மை ஆதார் என்ற செய்தியில் அப்டேட் டாக்குமெண்ட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஆதார் கார்டை நீங்கள் அப்டேட் செய்து கொள்ள முடியும். ரேஷன் கார்டு, இ-ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆன்லைனில் ஆதார் கார்டை டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *