Categories: latest newsschemes

வயசான காலத்துல நிம்மதியா இருக்கணுமா? அப்போ உடனே இத பண்ணுங்க.

இந்தியாவில் பல்வேறு அரசு துறைகளில் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு என ஓய்வூதியங்கள் வழங்கபடுகின்றன. இருந்தாலும் நமது நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என ஒரு வகை தொழிலாளர்களும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு என 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அடல் பென்ஷன் யோஜனா(Atal Pension Yojana)  எனபடும் ஓய்வு கால ஊதிய தொகை.

atal pension yojana

இத்திட்டத்தினை நாம் நமது வங்கி கணக்கின் மூலமோ அல்லது அஞ்சல் கணக்கின் மூலமோ தொடங்கலாம். மேலும் இத்திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(Pension Fund Regulatory and Development Authority of India) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களது வங்கி கணக்கு/ அஞ்சல் கணக்கு மூலம் தொடங்கலாம். இத்திட்டத்திற்கான முதலீட்டு காலம் 20 ஆண்டுகள். நமக்கு பின்னாளில் எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் எனும் கணக்கின் அடிப்படையில் நாம் முதலீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 42 முதல் அதிகபட்சமாக ரூபாய் 210 வரை செலுத்தலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையை காலாண்டு, அரையாண்டிற்கு ஒரு முறை செலுத்த விரும்பினால் இதன் சந்தா தொகை மாறுபடும்.

apy

வருமான வரி செலுத்தும் நபர்கள் இத்திட்டத்தில் சேர இயலாது. இத்திட்டத்தின்படி 60 வயதான பின் முதலீட்டாளர்கள் மாதம் ஓய்வூதியமாக ரூபாய் 1000, 2000, 3000, 4000, 5000 என தாங்கள் செலுத்திய தொகையின் அடிப்படையில் பெற்றுகொள்ளலாம்.

சந்தாதாரரின் மரணத்திற்கு பின் இந்த தொகையானது அவரின் கணவர்/ மனைவிக்கு கொடுக்கப்படும். இருவரும் இல்லாத நிலையில் இத்தொகையானது சந்தாதாரரால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு(nominee) கொடுக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் இணையும் பொழுது ஆதார் எண் மற்றும் மொபைல் எண் குறித்த விவரங்களை வங்கிக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கணக்கு தகவல்களை மொபைல் மூலம் எளிதாக பெறலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் இத்திட்டத்தை உடனே பயன்படுத்தி கொள்ளலாம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

1 month ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

1 month ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

1 month ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

1 month ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

1 month ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

1 month ago