Finance
எந்தெந்த வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கு எவ்வளவு வட்டி தறாங்கனு தெரிஞ்சிக்கணுமா?..அப்போ இத வாசிங்க..
நிலையான வைப்பு தொகை(Fixed Deposit) என்பது ஒரு நல்ல முதலீட்டு முறையாகும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு நாம் செலுத்தும் தொகையானது அந்த காலம் முடிந்தபின் வட்டியுடன் சேர்த்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். ஒவ்வொரு வங்கியும் தனக்கென சில வட்டிவிகிதத்தை வைத்துள்ளது. அது என்னென்ன என பார்க்கலாம்.
- எச்.டி.எஃப்.சி வங்கியானது தனது வங்கியில் நிலையான வைப்பு தொகைக்கு வட்டியாக 3% முதல் 7.3- வரை சாதாரண மக்களுக்கும் 7.55% வரை மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது.
- ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3% முதல் 7.10% வரையும் மூத்த குடிமக்களுக்கு 7.6%ம் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் வட்டியினை வழங்குகிறது.
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 வருல் காலத்திற்கு குறைந்தபட்சம் 3%மும் அதிகபட்சமாக 7.71% வரையிலும் வைட்டியினை வழங்குகிறது.
- ஆக்ஸிஸ் வங்கி குறைந்தபட்சம் 3.55 முதல் அதிகபட்சமாக 7.00% வரையிலும்
- பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைந்தபட்சம் 3% முதல் அதிகபட்சமாக 7.55 வரையிலும்
- பஞ்சாப் நேஷனல் வங்கி 3.5% முதல் 7.25% வரையிலும்
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 3% முதல் 6.7% வரையிலும்
- கனரா வங்கி 4% முதல் 7.4% வரையிலும்
- கோடக் மஹிந்திரா வங்கி 2.75% முதல் 6.20% வரையிலும்
- இந்தியன் வங்கியானது 7.10% வரையிலும்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது 4% முதல் 6.5% வரையிலும் வட்டியாக வழங்குகின்றன.
நாம் செலுத்தும் தொகையானது 2 கோடிக்கும் குறைவாக இருத்தல் அவசியம். மேலும் நிலையான வைப்பு தொகையானது 7 முதல் 10 ஆண்டுகள் எனும் கணக்கின் அடிப்படையில் வட்டியானது நிர்ணயிக்கப்படிகிறது. எனவே எந்த வங்கிகளிம் நாம் கணக்கினை வைத்துள்ளோமோ அந்த வங்கிகளிலேயே நாம் நிலையான வைப்பு தொகைக்கான கணக்கினை வைத்து கொண்டும் நமது பணத்தை நாம் நல்ல வழியில் சேமிக்கலாம்.