Finance
மாதம் வெறும் 1500 செலுத்தினால் போதும்..35 லட்சம் வரை பயனடைய செய்யும் பொன்னான போஸ்ட் ஆபிஸ் திட்டம்..வாங்க பார்க்கலாம்..
மக்களின் நலனுக்காக தபால் நிலையங்கலில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை நமது மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது கிராம் சுரக்ஷா திட்டம் எனும் பயனுள்ள திட்டத்தினை பற்றிய தகவல்களை காணலாம்.
கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு மாதமும் ரூ. 1500ஐ சந்தாவாக செலுத்தலாம். இவ்வாறாக நாம் செலுத்தும் போது இந்த தொகையானது முதிர்வடையும் பொழுது நமக்கு ரூ. 35 லட்சமாக திரும்ப பெற்று கொள்ளலாம்.
வயது வரம்பு:
இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சமாக 19 வயதினையும் அதிகபட்சமாக 55 வயதினையும் அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக ரூ. 10000மும் அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும் அளிக்கப்படுகிறது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நாம் இந்த கணக்கில் கடனும் வாங்கி கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் நாம் 55, 58 அல்லது 60 வயது வரையும் கூட சந்தாவை செலுத்தலாம். இந்த திட்டத்தின் கீழ் நாம் தொடர்ந்து ரூ. 1500 செலுத்தினால் திட்டம் முதிர்வடையும் காலத்தில் நமக்கு ரூ. 31 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை மொத்த தொகையை பெற்று கொள்ளலாம்.
திட்டத்தின் வரம்புகள்:
- இத்திட்டத்தில் சேருபவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- இத்திட்டத்தில் சேருபவர் 19 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- இத்திட்டத்தின் சந்தா தொகையை நாம் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடம் என்ற கணக்கில் கூட செலுத்தலாம்.
- நாம் இந்த கணக்கினை தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்த பின் நாம் விருப்பப்பட்டால் இந்த கணக்கினை முற்றிலுமான நிறவடையவும் செய்யலாம். ஆனால் இந்த வகை கணக்கினை முடித்தால் நமக்கு இந்த திட்டத்தின் கீழ் எந்த லாபத்தையும் பெற இயலாது.
- இத்திட்டத்தில் பணம் செலுத்த கருணை காலமாக 30 நாட்கள் தரப்படுகிறது.
எனவே இந்த பொன்னான திட்டத்தில் சேர்ந்து நமது குடும்பத்திற்கு நன்மை சேர்ப்போம்