Connect with us

latest news

வங்கி கணக்கில் பணமே இல்லாமல் 10000 வரை எடுக்கலாம்.. அதென்ன திட்டம்னு பார்ப்போமா?

Published

on

pradhan mantri jan dhan yojana1

இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு வங்கிகளை பற்றிய தகவல்கள் சென்றடைவதில்லை. வங்கிகணக்கு இல்லாமல் பல பேர் இந்தியாவில் உள்ளனர். அப்படிபட்டவைகளுக்கென 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(Pradhan Mantri Jan Dhan Yojana). ஆரம்பகாலத்தில் இத்திட்டத்தினை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தாலும் தற்போது இக்கணக்கில் வரவு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 46.25 கோடியாக உயர்ந்துள்ளது. இக்கணக்கினை பற்றிய தெளிவான தகவல்களை இப்போது நாம் பார்க்கலாம்.

pmjdy1

pmjdy1

பிரதான் மந்திரி மக்கள் நிதி திட்டம் எனும் இத்திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கணக்கினை தொடங்கலாம். இக்கணக்கினை தொடங்குவதற்கு நாம் எவ்வித முதலீடும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இக்கணக்கினை வைத்திருப்போருக்கு வங்கியின் ரூபே(rupay) டெபிட் கார்டானது வழங்கப்படும். இதன் மூலம் லைஃப் கவரேஜாக ரூ. 30000மும், விபத்து காப்பீடாக ரூ. 2,00,000 வரையும் பெற்று கொள்ளலாம்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் நமது வங்கி கணக்கில் இருந்து 10,000 வரை ஒவர் டிராஃப்ட்(overdraft) ஆக பெற்று கொள்ளலாம். ஆனால் இவ்வாறு பெறுவதற்கு நாம் ஜன் தன் கணக்கை தொடங்கி குறைந்தது 6 மாத காலங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திட்டத்தில் கணக்கினை வைத்திருப்போர் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா(PMJJBY), பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா(PMSBY), அடல் பென்ஷன் யோஜனா(APY), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா(PMMY) போன்ற திட்டங்களுக்கும் தகுதியானவர்களாக கருதப்படுவர்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news