Connect with us

latest news

10 லட்சம் தொடங்கி 1 கோடி வரை கடனுதவி.. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இதோ தெரிஞ்சுக்கோங்க..!

Published

on

தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களின் கனவை செயல்படுத்தும் விதமாக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் தொழில் செய்பவர்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் ஆகியோருக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டம் துவங்கப்பட்டது. அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் மூலமாக 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன்கள் பெறலாம். சிறு தொழில் துவங்கி பெரிய தொழில் முனைவோராக முயற்சி செய்பவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக கடன்கள் வழங்கப்படுகின்றது. அதிலும் பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகின்றது. சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .

அவர்கள் தங்கள் சொந்த தொழில் ஆரம்பிப்பதற்கு 10 முதல் 15 சதவீதம் டெபாசிட் செய்ய வேண்டும். மீதி பணத்தை ஸ்டாண்ட் ஆப் இந்தியா திட்டம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் வாயிலாக 2.41 லட்சம் பேருக்கு 54 ஆயிரத்து 698 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. சொந்தமாக தொழில் செய்யும் பெண்கள் 10 முதல் 15% முதலீட்டை அவர்கள் செய்யும் போது மீதி பணத்தை அரசு கடனாக வழங்குகின்றது.

இந்த தொகையை திருப்பி செலுத்துவதற்கு 18 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்படுகின்றது. 18 மாதங்கள் இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டியது இல்லை. அதன் பின்னர் செலுத்தினால் போதும் இந்த பலனை பெறுவதற்கு 18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். தொழில் துவங்கி பிசினஸ் செய்து வரும் பெண்களும் தங்களுடைய தொழிலை விரிவு படுத்துவதற்கு இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

google news