latest news
சில நாட்களில் முடியுது.. இலவசமாக ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டில் உங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ திட்டமிடுகின்றீர்களா? இதனை உடனே செய்து முடிக்க இதுதான் சரியான நேரம். இந்தியாவில் ஆதார் சேவைகளை வழங்கி வரும் யு.ஐ.டி.ஏ.ஐ. ஆன்லைன் வலைதளத்தில் ஆதார் அப்டேட் செய்வதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
ஜூன் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது இலவசம் தான். இதே வழிமுறையை ஆதார் மையங்களுக்கு நேரடியாக சென்றும் மேற்கொள்ள முடியும். எனினும், அதற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மைஆதார் போர்டலில் (Myaadhar portal) இலவசமாக ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு இருந்தால், ஆதார் கார்டுகளை அப்டேட் செய்யும் வழிமுறையை யு.ஐ.டி.ஏ.ஐ. ஊக்கப்படுத்தி வருகிறது. ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய, ஆதார் வலைதளத்தில் உங்களது தரவுகளை அப்லோடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
1- முதலில் மைஆதார் போர்டலில் லாக்-இன் செய்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களிடம் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் வைத்திருப்பது அவசியம் ஆகும். வலைதளத்தின் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து ‘Document Update’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2 – ஏற்கனவே பதிவாகி இருக்கும் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அடுத்த ஹைப்பர்லின்க்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
3 – அடையாள சான்று, முகவரி சான்று உள்ளிட்டவைகளை தேர்வு செய்து, இவற்றின் டிஜிட்டல் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கப்பட்ட தரவுகளின் விவரங்கள் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும்.
4 – இனி உங்களுக்கு 14 இலக்க அப்டேட் ரிக்வஸ்ட் நம்பர் அனுப்பப்படும். இதை கொண்டு ஆதார் அப்டேட் நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
5 – விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டதும், சமீபத்திய ஆதார் கார்டை பெற்றுக் கொள்ள முடியும்.
மைஆதார் போர்டலை பயன்படுத்தும் போது இந்த சேவை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதன் மூலம் பொது மக்களின் சமீபத்திய விவரங்களை அரசாங்கம் பெற்றுக் கொள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட ஆதார் மையங்களில் இதே சேவைக்கான கட்டணம் ரூ. 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.