Categories: latest newsschemes

ரூ. 1500 முதலீடு செய்தால் மட்டும் போதும்… ரூ. 31 லட்சம் வருமானம் கிடைக்கும்… போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!

தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. போஸ்ட் ஆபீஸில் சேமிக்க விரும்புபவர்களுக்கு ஒரு சூப்பரான திட்டம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய சூழலில் சேமிக்க விரும்புபவர்களுக்கு தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் சிக்கல் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு திட்டமிட்டு சேமிக்க வேண்டியது மிக அவசியம். போஸ்ட் ஆபீஸில் சேமிக்க விரும்புவர்களுக்காய் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் உள்ள சிறப்பான சேமிப்பு திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக சேமிப்புத் திட்டங்கள் தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பிறகு தங்களின் வழக்கமான வருமானத்தை இழக்காமல் இருப்பதற்கும் எதிர்கால வாழ்வு இருக்கும்.

சரியான வழியில் டெபாசிட் செய்ய வேண்டியது அவசியம். இதற்கான சரியான திட்டங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் பிரபலமான சேமிப்பு திட்டம் தான் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக 10,000 செய்ய முடியும்,

அதிகபட்சமாக 10 லட்சம் வரையில் நீங்கள் டெபாசிட் செய்யலாம். மாதவாரியாக, காலாண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக என முதலீடாளர்கள் விருப்பப்படி இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். பிரிமியம் செலுத்துவதற்கான அவகாசம் 30 நாட்கள் பாலிசி காலத்தை தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கும், 65 ரூபாய் போனஸ் வழங்கப்படுகின்றது. ஒருவர் 19 வயதில் 10 லட்சத்துக்கு இந்த திட்டத்தில் பாலிசி எடுத்தால் 55 ஆண்டுகளுக்கு பிரிமியமாக ஒவ்வொரு மாதமும் 1,515 ரூபாய் செலுத்த வேண்டும். 58 ஆண்டுகளுக்கு 1,463 ரூபாய், 60 ஆண்டுகளுக்கு 1,411 ரூபாய் ப்ரீமியம் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் 55 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு தொகையாக 31.60 லட்சம் ரூபாயும், 58 ஆண்டுகளுக்கு பிறகு 33.40 லட்சம் ரூபாயும் மற்றும் 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 34.60 லட்சமும்  பயன் பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்பு கடன் பெறும் வசதியும் இருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

2 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

2 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

2 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

2 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

2 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

2 weeks ago