உங்கள் — கணக்கில் இருந்து முன்னதாகவே பணத்தை எடுக்க வேண்டுமா?..அப்போ இத படிங்க..

மக்களின் பணத்தை சேமுக்கும் எண்ணத்தில் இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. வருங்காலத்தில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்யவே இவ்வாறான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு திட்டம்தான் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500ம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். நடப்பு ஆண்டில் இதற்கான வட்டியாக 7.1% கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் நாம் சில நிபந்தனைகளுடன் முதிர்வு காலத்திற்கு முன்பே இந்த கணக்கில் உள்ள பணத்தினை சில அவசர தேவைகளுக்காக எடுக்க முடியும்.

இந்திய குடிமகனாய் உள்ள எவர் வேண்டுமானலும் இந்த கணக்கினை அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் ஆரம்பித்து கொள்ளலாம். இதனை நாம் நமது குழந்தைகளுக்காக கூட தொடங்கலாம். ஆனால் அவர்களின் பெற்றோரின் கணக்கினை உபயோகப்படுத்தியே தொடங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

withdraw 50 amount after 7 yrs

நாம் நமது கணக்கினை தொடங்கி 7 ஆண்டுகள் ஆன பின் இந்த கணக்கில் இருந்து நாம் பணத்தினை எடுத்து கொள்ளலாம். ஆனால் நாம் முழுத்தொகையையும் எடுக்க இயலாது. இந்த கணக்கில் உள்ள மொத்த தொகையில் இருந்து 50% தொகையை மட்டுமே நாம் முன்னதாகவே எடுக்க முடியும்.

இந்த தொகையை எவ்வாறு எடுப்பது?

இந்த தொகையை நாம் எடுப்பதற்கு முதலில் வங்கியிலோ அல்லது தபால் நிலயங்களிலோ ஃபார்ம் சி எனப்படும் ஆவணத்தை வாங்க வேண்டும். பின் அந்த ஃபார்ம் சி(Form c)-யில் நமது கணக்கின் எண்ணையும் நம்க்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன் ரிவன்யூ ஸ்டாம்ப்(Revenue Stamp) இருப்பதும் அவசியம். இதனை நமது பாஸ்புக் உடன் சேர்த்து வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்தபின் நாம் கேட்ட தொகையானது  நமது வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இந்த பி.பி.எஃப் கணக்கின் மிது நாம் கடன் கூட வாங்கலாம். ஆனால் அதற்கு நாம் கணக்கினை தொடங்கி 3 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago