Connect with us

latest news

கணவன்-மனைவி இரண்டு பேருக்கும் பென்ஷன் கிடைக்கும்… அதுவும் மாதம் 10,000… அசத்தலான திட்டம்..!

Published

on

வெறும் 7 ரூபாய் இருந்தால் மாதம் 5000 பென்ஷன் கிடைக்கும் சிறந்த திட்டத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சொந்த தொழில் செய்தாலும் அல்லது வேறு எங்கேயாவது நிறுவனத்தில் வேலை செய்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அனைவரும் ஒரு கட்டத்தில் உட்காந்து சம்பாதிக்க விரும்புவார்கள். இருப்பினும் பணவீக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் அதிக செலவுகள் காரணமாக முதுமை காலத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் கழிப்பது என்பது சற்று கடினமாக இருக்கின்றது.

எனவே நீங்கள் உங்கள் முதுமை காலத்திற்கு இப்போது இருந்தே பணத்தை சேமிக்க வேண்டும். உங்கள் முதுமையை நிதி ரீதியாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 7  ரூபாய் எடுத்து வைத்தால் கூட 60 வயதில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அத்தகைய சிறந்த ஓய்வூதிய திட்டம் குறித்து இந்து தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூலமாக உங்களின் ஓய்வு காலத்தை மிக மகிழ்ச்சியாக கழிக்க முடியும். இது ஓய்வூதிய உத்தரவாதத்துடன் கிடைக்கும் சிறந்த திட்டம். நீங்கள் 7 ரூபாய் சேமித்து வைத்து 20 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஓய்வு பெறும் வயதிற்குள் நல்ல தொகையை குவிக்கலாம். உங்களது வயது 18 முதல் 40 வயது வரை இருந்தால் போதும். நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் 210 முதலீடு செய்தால் 60 வயதிற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் கிடைக்கும். அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை தொடரலாம் .நீங்கள் அங்குள்ள அடல் பென்ஷன் யோஜனாவின் பதிவு படிவத்தை பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். உங்கள் சேமிப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் தொகையை நீங்கள் டெபாசிட் செய்ய முடியும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த கணக்கை தொடங்கலாம். ஓய்வு பெறும் போது இருவருக்கும் கணக்கு இருந்தால் ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இருவரும் இறந்தவுடன் நாமினிக்கு இந்த பணம் சென்றடையும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *