ஒரு காலத்தில் வங்கிகளைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த ஏழை பாமர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய தபால் துறை கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டத்தை 1988ல் தொடங்கியது.
கிசான் விகாஸ் பத்ரா என்பது மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு அருமையான திட்டம். மேலும் சிறு சேமிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்றும் சொல்லலாம்.
நோக்கம்
கிசான் விகாஸ் பத்ரா என்பது ஒரு சிறு சேமிப்பு கருவி தான். இதை நாம் உபயோகப்படுத்தினால் நமக்கு நல்லது. நெருக்கடியான காலகட்டத்தில் இந்த பத்திரம் உதவக்கூடும். இது நீண்ட கால சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் மக்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குகிறது.
2014ல், கிசான் விகாஸ் பத்ரா திட்டம், மக்களின் சிறிய அளவு சேமிப்பு என்ற எண்ணத்தையாவது அவர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் உருவாக்கி அதை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 மற்றும் நூறு ரூபாய்களின் மடங்குகளில் எந்தத் தொகையும் கணக்கில் டெபாசிட் செய்யலாம். ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம்.
இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளியும் கணக்கைத் தொடங்கலாம். நிபந்தனைக்கு ஒரு தனிநபரிடமிருந்து மற்றொருவருக்குக் கணக்கைமாற்றப்படலாம். மைனரின் பெயரில் கணக்கைத் தொடங்கவும் செய்யலாம்.
வகைகள்
ஒரு பெரியவர் தனக்காகவோ அல்லது மைனர் சார்பாகவோ அல்லது அவர் பாதுகாவலராக இருக்கும் மனநிலை சரியில்லாதவர் சார்பாகவோ அல்லது பத்து வயதை எட்டிய மைனர் மூலமாகவோ ஒற்றை வைத்திருப்பவர் வகை கணக்கைத் திறக்கலாம்.
கூட்டு ஏ வகைகளில் கணக்கு மூன்று பெரியவர்களின் பெயர்களில் கூட்டாக திறக்கப்படலாம்
கூட்டு பி -வகைக் கணக்கு மூன்று பெரியவர்களின் பெயரில் கூட்டாகத் திறக்கப்படலாம்,.
இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கோ அல்லது உயிர் பிழைத்தவர்களுக்கோ அல்லது உயிர் பிழைத்தவர்களுக்கோ செலுத்தப்படும்.
எந்த இந்திய குடியிருப்பாளரும், சிறார்களின் சார்பாகவும் வாங்கலாம். இந்தத் திட்டத்திற்கு அதிகபட்ச வயது தேவை இல்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தைப் பெற தகுதியற்றவர்கள்.
வட்டி விகிதம்
கிசான் விகாஸ் பத்ரா மீதான தற்போதைய வட்டி விகிதம் 6.9மூ. இது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.
முதிர்வு காலம்
உங்களது முதலீடு 124 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.
கேவிபி சான்றிதழை பணமாக்குவதற்கு முன், கிசான் விகாஸ் பத்ரா திரும்பப் பெறும் விதிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்:
கிசான் விகாஸ் பத்ராவின் முதிர்வு காலம் 124 மாதங்கள். அதன் பிறகுதான் முழுமையாக திரும்பப் பெற முடியும். 30 மாதங்களுக்குப் பிறகு முன்கூட்டியே பணமாக்குதல் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் கிளையை அணுகுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…