Connect with us

Finance

நீங்க வேற வேலைக்கு மாறி போறீங்களா?..உங்கள் பிஎஃப் அக்கெளண்டில் உடனே இத பண்ணுங்க..

Published

on

epfo merge

இந்தியாவில் அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு என ஒரு பி எஃப் கணக்கானது உள்ளது. நாம் பெறும் அடிப்படை மாத வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினை நாம் பணிபுரியும் நிறுவனமானது இந்த கணக்கிற்காக ஒதுக்கும். இதில் உள்ள பணமானது நமக்கு ஒரு சிக்கலான சமயத்தில் உதவும்.

இந்த கணக்கினை வைத்திருப்பவர் அவர்களுக்கென PF அக்கெளண்டை வைத்திருப்பர்.  UAN எண் மற்றும் அவர்களில் மொபைல் எண்ணை கொண்டு இந்த கணக்கினை நாம் உபயோகப்படுத்தலாம். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அவ்வப்போது தங்களின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் வேறு வேலையை தேடி செல்வர். அப்படி மாறுகையில் நாம் நமது பென்ஷன் கணக்கினை நாம் செல்லும் புதிய நிறுவனத்தின் கணக்குடன் இணைத்திட வேண்டும்.

UAN number

UAN number

ஒவ்வொரு நிறுவனத்திலும் நாம் மாறும்பொழுது அந்த நிறுவனம் அவர்களுக்கென்று தனி பிஎஃப் கணக்கினை ஆரம்பிப்பர். என்வே நாம் பணியாற்றிய பழைய நிறுவனத்தில் பிஎஃப் கணக்கில் உள்ள பணம் இந்த கணக்கில் சேராது. எனவே நாம் பழைய கணக்கினை இந்த புது கணக்கில் இணைப்பதால் நமக்கு அனைத்து பிஎஃப் தொகையும் ஒரே கணக்கில் சேர்ந்து இருக்கும். இவ்வாறு இணைப்பதற்கு நாம் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் சர்வீஸ் எனும் பட்டனை அழுத்த வேண்டும். பின் One Employee One EPF என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

one member one epf

one member one epf

பின் OTP-யானது அவர்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். பின் அந்த OTPயை நாம் செலுத்தியபின் அந்த பக்கமானது லாகின் ஆகும். பின் இந்த கணக்கினை இணைக்கும்படியான பட்டனை கிளிக் செய்து பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடாக செலுத்த வேண்டும். பின் நமது பழைய UAN எண் மற்றும் மெம்பர் ஐடியை கொடுக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை OTP-யானது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். இந்த எண்ணை உள்ளீடாக செலுத்திய பின் நமது பழைய கணக்கின் தகவல்களை காட்டும். பின் நமது பிஎஃப் கணக்கின் எண்ணை கொடுத்து பின் சமர்ப்பிக்க வேண்டும். பின் ஓரிரு நாட்களில் நமது பழைய கணக்கானது இந்த புது கணக்குடன் இணைக்கப்படும். எனவே வேறு வேலைக்கு மாறும் ஊழியர்கள் இந்த விஷயத்தை மறக்காமல் கையாள வேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *