latest news
ஒவ்வொரு மாதமும் அக்கவுண்டுக்கு தேடி வரும் ரூபாய் 5000… யாரெல்லாம் வாங்கலாம்…?
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு மாதம் தோறும் 5000 உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதி, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
நம் நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகின்றது. படிப்பிற்கான வேலையை வாங்குவது என்பது இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறியிருக்கின்றது. தற்போதைய காலகட்டத்தில் ஆயிரம் காலிபணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
இதனால் மத்திய அரசு இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டமான பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா என்பதை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இந்த திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகின்றது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் மத்திய அரசு வேலைக்கான பயிற்சி வழங்கும் திட்டமாகத்தான் இந்த பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தொழில் பயிற்சி திட்டமாகும்.. அரசு நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களை இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க தேர்வு செய்கின்றது. இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக இந்த நிறுவனத்தின் வாயிலாக இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தை கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகையில் 4,500 மத்திய அரசும் 500 ரூபாய் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும். வரும் 12ஆம் தேதி அதாவது நாளை முதல் தகுதி உள்ள இளைஞர்கள் இந்த திட்டத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை நிறுவனங்கள் பரிசீலினை செய்து நவம்பர் 27ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் பட்டியலை வெளியிடும்.
டிசம்பர் இரண்டாம் தேதி முதல் பயிற்சிகள் வழங்கப்படும் நடப்பு நிதி ஆண்டான 2024-25 இல் 1.25 பெயருக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 21 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
முழு நேர ஊழியராக வேறு எந்த நிறுவனத்திலும் பணியாற்றக்கூடாது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்தவர்கள், பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ, பி ஃபார்ம் உள்ளிட்ட டிகிரி முடித்தவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.