latest news
வெறும் 5 வருஷம் முதலீடு செஞ்சா இவ்வளவு வட்டி கிடைக்குதா…? போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!
போஸ்ட் ஆபீஸில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தபால் நிலையங்களில் எப்டி ஸ்கீம்களில் பிரபலமான ஒரு திட்டத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
எதிர்காலத்திற்கு சேமிக்க விரும்புபவர்களுக்கு தபால் நிலையங்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆயிரத்தில் தொடங்கி லட்சங்களில் சம்பாதித்தாலும் நிம்மதியான எதிர்கால வாழ்விற்கு சேமிக்க வேண்டியது ஒரு முக்கியமானது. தற்போதைய காலகட்டத்தில் சம்பாதிக்கும் அனைவருமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். போஸ்ட் ஆபீஸில் உள்ள சூப்பரான சேமிப்பு திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.
தபால் நிலையங்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. எந்த திட்டத்தை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்வது என்பது பலருக்கும் ஒரு குழப்பமாக இருக்கும். சரியான திட்டங்களை செலக்ட் செய்து முதலீடு செய்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபம் நமக்கு கிடைக்கும்.
அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சிறப்பான ஒன்றான நிலையான வாய்ப்பு எப்டி திட்டம் உள்ளது. இதில் நஷ்டம், உத்தரவாதமான வருமானம் பற்றி எந்த ஒரு பயமும் கிடையாது. இதனால் பலரும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்து வருகிறார்கள். தபால் நிலையங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் எப்படி கணக்குகளை நீங்கள் ஓபன் செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் அடிக்கடி வட்டி விகிதங்கள் மாற்றப்படும். இதனால் வாடிக்கையாளர்களின் அசல் தொகையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி சேர்க்கப்பட்டு வரும். எப்டி திட்டங்களுக்கு தபால் நிலையத்தில் அதிக வட்டி கிடைக்கின்றது. நீங்கள் இரண்டு லட்சம் முதலீடு செய்யும் போது அடுத்த 5 ஆண்டுகளில் வருமானத்தை பெற முடியும். தபால் நிலையங்களில் 1000 செலுத்தி நீங்கள் எப்டி கணக்கை துவங்கிக் கொள்ள முடியும்.,
அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட கால திட்டத்திற்கு அதிக வட்டி கிடைக்கின்றது. தற்போது எப்டி திட்டத்தில் இரண்டு லட்சம் டெபாசிட் செய்யும்போது வருடத்திற்கு 6. 9% வட்டி கிடைக்கும். மூன்று வருடங்களுக்கு 7.1 % மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7.5 % வட்டி கிடைக்கின்றது. இதனால் ஒரு லட்சம் நீங்கள் முதலீடு செய்யும் போது ஒரு ஆண்டுக்கு வட்டியாக 7080 ரூபாயை பெற முடியும்.
இதன் மூலம் ஓராண்டுக்கு பிறகு முதலீடு தொகையுடன் ரூ. 1,07,080 பெறலாம். இது 2 வருடம், 3 வருடம் என்று ஏறிக்கொண்டே போகும். 5 ஆண்டுகளில் உங்களுக்கு 44 ஆயிரத்து 994 வட்டி வழங்கப்படுகின்றது. இது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையை பொறுத்து வட்டி கூடிக் கொண்டே இருக்கும்.