மாதம் 9000 வருமானம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
நல்ல ஒரு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து சேமிக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்காக பல திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் செயல்படுத்தி வருகின்றது. தபால் நிலையம் அரசுடையது என்பதால் முதலீடு செய்யும் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். உத்தரவாத வருமானம் கிடைக்கும் என்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் தான் சேவிங்ஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தபால் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் ஒன்று குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க எண்ணுகிறார்கள். பலரும் தங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை சேமிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி சேமிக்க விரும்புவதற்காக போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகள் பல சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
ஓய்வுக்கு பிறகு வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் குறிப்பிடத் தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் அதன் மூலம் உங்களுக்கு மாதம் மாதம் வருமானம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸில் மாதாந்திர வருமான திட்டத்தில் மொத்தமாக 9 லட்சம் முதலீடு செய்யும் போது மாத வருமானம் 9,250 கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தனது மனைவியுடனும் இணைந்து முதலீடு செய்யலாம். அப்படி மொத்தம் 15 லட்சம் டெபாசிட் செய்யும்போது மாதம்தோரும் நீங்கள் அதை வருமானத்தை பெற முடியும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். போஸ்ட் ஆபீஸ் தற்போது மாதாந்திர வருமான திட்டத்திற்கு 7.4% கொடுக்கின்றது.
குறைந்தபட்சமாக 1000 டெபாசிட் செய்து இந்த திட்டத்தை தொடங்க முடியும். நிலையான வைப்பு போன்ற நிலையான வருமான திட்டங்களை விட மாதாந்திர வருமான திட்டத்திற்கு அதிக வட்டி கிடைக்கின்றது. இந்த திட்டத்தில் மாத வருமானம் உங்களுக்கு 9 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். முதல் காலத்திற்குப் பிறகு அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் காண முதிர்வு காலமானது 5 ஆண்டுகள். இதனை 15 ஆண்டுகள் வரை நாம் நீட்டிப்பும் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் முன்கூட்டியே கணக்கை முடக்கவும். ஒரு வருடம் கழித்து பணத்தை எடுக்கவும் முடியும். மேலும் ஒரு வருடத்தில் இருந்து 3 வருடத்திற்குள் பணத்தை எடுத்தால் முதலீட்டு தொகையிலிருந்து 2 சதவீதம் நீங்கள் அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…