போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
இன்றைய சூழலில் அனைவருமே சிக்கல் இல்லாத எதிர்கால வாழ்விற்காக சேமிப்பு திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வயதான காலத்தில் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் தங்களை சிறப்பாக பாதுகாத்துக் கொள்வதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். இப்படி எதிர்காலத்திற்காக நீங்கள் சேமிக்க விரும்புபவராக இருந்தால் உங்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் இதுதான்.
இது போல சேமிக்க விரும்புபவர்களுக்காக வங்கிகளும், போஸ்ட் ஆபீஸ்களும் சிறந்த திட்டங்களை வழங்கி வருகின்றன. ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்களை பணத்தை சேமிப்பதற்கு வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்கள் செயல்படுத்தி வருகிறது. முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மிகவும் பலனளிக்கக் கூடியது.
ஏனென்றால் இந்தியாவில் வசிக்கும் யாராக இருந்தாலும் குறைந்த முதலீட்டில் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கை துவங்க முடியும். தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைப் இன்சூரன்ஸ் வசதிகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருவர் தினமும் 333 சேமிப்பதன் மூலம் 17 லட்சம் வரை வருமானத்தை பெற முடியும்.
இந்த திட்டத்தை வெறும் 100 ரூபாய் முதலீட்டில் நீங்கள் தொடங்க முடியும். ஒருவர் அல்லது மற்றவருடன் சேர்ந்து கூட்டுக்கணக்காகவும் ஆர்டி திட்டத்தை தொடங்கலாம். இதற்கு 6.8 வருடாந்திர வட்டி கொடுக்கப்படுகின்றது. மாத மாதம் சுமார் 10,000 முதலீடு செய்தால் போதும் அதாவது தினமும் 333 சேமித்தால் போதுமானது. அப்படி செய்யும் பட்சத்தில் ஒருவர் இந்த திட்டத்தில் ஆண்டு முழுவதும் 1.20 முதலீடு செய்திருப்பார்கள்.
இதன் மூலமாக ஐந்து ஆண்டுகளில் ஒருவர் இந்த திட்டத்தில் ரூ. 5,99,400 தொகையை முதலீடு செய்வார்கள். ஆண்டுக்கு 6.8 விகிதத்தில் 5 ஆண்டுக்கு மொத்த வட்டி தொகையாக ரூ. 1,15,427 கிடைக்கும். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் மெச்சூரிட்டி தொகையாக ரூ.7,14,827 பெற முடியும். இந்த தொகையை எடுக்காமல் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை தொடரும்போது பத்து ஆண்டுகளில் 12 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும். அதன்படி 6.8 வட்டியை கணக்கிடும்போது உங்களுக்கு முதிர்வு தொகையாக ரூ. 17,08,546 வருமானமாக கிடைக்கும். இது எதிர்கால வாழ்விற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…