Connect with us

latest news

ரூ. 21 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… எப்படி, எவ்வளவு முதலீடு செய்யணும்..?

Published

on

போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வரும் ரெக்கரிங் டெபாசிட் சேமிப்பு திட்டம் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

இன்றைய சூழலில் அனைவரும் எதிர்கால சேமிப்பிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலரும் நிம்மதியான எதிர்காலத்தை வாழ்வதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். சம்பாதிக்கும் அனைவரும் சேமிக்க வேண்டியது என்பது மிக அவசியமானது. வயதான பிறகு நீங்கள் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் வாழ முடியும். அப்படி சேமிக்க விரும்புபவர்களுக்கு வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் பல திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது.

வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபீஸில் செயல்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டத்தில் ஏராளமான வட்டிகள் கிடைக்கின்றன. முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மிகச் சரியான தேர்வாக இருக்கும். பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைப் இன்சூரன்ஸ் வசதிகளை தபால் நிலையம் வழங்கி வருகின்றது. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் முக்கிய ஒன்று ரெக்கரிங் டெபாசிட் சேமிப்பு திட்டம்.

தபால் நிலையத்தை பொருத்தவரையில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றது. அவற்றில் மிக சிறந்த திட்டம் தான் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த ஸ்கீம் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் பிறர் நீண்ட கால சேமிப்பு திட்டத்திற்கு மாற்றாக இருக்கின்றது. இந்த இந்த திட்டத்திற்கு தபால் நிலையங்களில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் தொகையை ரெக்கரிங் திட்டத்தில் டெபாசிட் செய்யும்போது முதிர்வு தொகையாக 21 லட்சத்தை முதலீட்டாளர்கள் பெற முடியும். அதாவது ஒருவர் 30,000 டெபாசிட் செய்யும் போது அவர்களுக்கு 21 லட்சத்து 40 ஆயிரத்து 740 ரிட்டனாக கிடைக்கும். ஐந்து ஆண்டு மெச்சூரிட்டி காலத்திற்குப் பிறகு இந்த தொகை உங்களுக்கு கைகளில் கிடைக்கும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 6.7 சதவீதம் வட்டி கொடுக்கப்படும் நிலையில் வட்டி ரூ. 3,40,974 கிடைக்கும். மெச்சூரிட்டி தேதி வரை இந்த திட்டத்தில் பணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் வட்டி உயர்த்தப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கால அளவு ஆனது 5 வருடம். தபால் துறை நிர்ணயம் செய்துள்ள இந்த கால வரம்பை ஐந்து ஆண்டுக்குப் பிறகு நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். ஆர் டி கணக்கை ஐந்தாண்டுகளுக்கு பிறகும் நீங்கள் தொடர நினைத்தால் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு அக்கவுண்டை நீட்டித்துக் கொள்ள முடியும். இதற்கான அனுமதி உள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு மொத்த கால அளவு மாறும். மேலும் இந்த திட்டத்தில் பத்து ரூபாயை டெபாசிட் செய்தும் இணையலாம் என்று கூறப்படுகின்றது.

google news